தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

திருக்கேதீஸ்வர ஆலய கலந்துரையாடலில் இராணுவம்….

கோத்தா மீது பாய்ந்தது CID….

அவன்ட் க்ரேட் என்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த சில வகை ஆயுதங்கள் யுத்த காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுபவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகள் சற்று சிக்கல் நிறைந்தது எனவும், சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டியேற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வர ஆலய கலந்துரையாடலில் இராணுவம்….

சிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்தில் பல கிராமங்களிலிருந்தும் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருக்கேதீஸ்வர ஆலயம் வருவதாக எதிர்பார்ப்பதால் போக்குவரத்து சிறந்த முறையில் இடம்பெற வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபை 45 பஸ்களையும்,தனியார் போக்குவரத்து சங்கம் 50 பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்தடன் இரு சேவைகளும் ஒரே இடத்திலிருந்து இருபது நிமிடத்துக்கு ஒவ்வொன்றாக சேiயில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆலய வீதி மற்றும் உள்ளக வீதிகள் சீர் செய்யப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தபப்பட்டதுடன் சுத்திகரிப்பு மின்சாரம் உணவு குடிநீர் சாரணியர் சேவை பிரதேச செயலக கடமைகள் தற்காலிக கொட்டகை அமைத்தல் கலை நிகழ்வுகள் போன்ற ஆயத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இவ் கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய முக்கியஸ்தர்களான புலவர் திருநாவக்கரசு, எஸ்.எஸ். இராமகிருஷ;ணன், வீ.கந்தசாமி, திருமதி. கைலாசப்பிள்ளை, எஸ்.ராகவன், வைத்திய கலாநிதி. மு. கதிர்காமநாதன் உட்பட காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.Madu 1Madu 2Madu


http://www.jvpnews.com/srilanka/97132.html

Geen opmerkingen:

Een reactie posten