[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 12:56.24 PM GMT ]
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் யாராவது இனவாத ரீதியில் செயற்பட்டால் அல்லது ஒரு இனத்துக்கு எதிராக அறிக்கைகளை விட்டால், ஒரு சமயத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினால் அவர்கள் சகலரையும் கைது செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பௌத்த மக்களையும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தும் வகையில், இன ஐக்கியத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் டிலான்த விதானகேயுடன் சேர்ந்து முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்ன என்பதை முழு நாடும் அறியும் ஒரு விடயம்.
இறுதியாக நடைபெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் பெண்களின் ஆடை மற்றும் முஸ்லிம் ஆலோசனை சபை என்பவற்றைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி இழிவுபடுத்தியுள்ளார்.
டிலாந்தவையும், ஞானசார தேரரையும் தேடும் நடவடிக்கையைத்தான் பொலிஸார் தற்பொழுது முன்னெடுக்க வேண்டும்.
இவர்கள் நோர்வேயிடம் பணம் பெற்ற முறை, அமெரிக்காவுக்கு சென்ற முறை, தென்கொரியாவுக்கு சென்று பணம் எடுத்து வந்த முறை என்பன பற்றிய உண்மைகளை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.
இது குறித்து விவாதிக்க ஞானசார தேரரை அழைத்தால், என்னுடன் மாத்திரம் விவாதத்துக்கு தயாரில்லையென கூறுகின்றனர் என குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfo4.html
வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 01:10.35 PM GMT ]
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfo6.html
இலங்கை - சீனா உறவில் சிறப்பான நிலை!- சீன செய்தி நிறுவனம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 01:21.04 PM GMT ]
இந்த தகவலை, சீன செய்திச் சேவையான சின்ங்க்வா தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொம்யூனிஸக் கட்சியின் சிரேஸ்ட தலைவரான வாங்க் ஜியாருய் என்பவரை கோடிட்டு சீன செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
தம்முடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால, சீனா முன்னைய வருடங்களில் இலங்கையில் மேற்கொண்ட சேவைகளை நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்தும் சீனாவின் உறவை பலப்படுத்திக் கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டார் என்று சீன செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் உறவு குறித்த முக்கியத்துவத்தை தம்முடனான சந்திப்பின் போது வலியுறுத்தியதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸக் கட்சியின் சிரேஸ்ட தலைவரான வாங்க் ஜியாருய் நேற்றும் இன்றும் இலங்கையில் தமது பயணத்தை மேற்கொண்டு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfo7.html
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம், மத்திய வங்கியினால் ஆய்வு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 01:35.02 PM GMT ]
இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கத்தின் போதும் இதேநிலைமை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த முறைமை விலக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறின்றி புதிய அரசாங்கமும் வெளிநாட்டவர்களால் இலங்கையில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடுகின்ற பணம் இரண்டு நாட்கள் வரையில் மத்திய வங்கியினால் தேக்கி வைக்கப்படுகிறது.
அது தொடர்பான முழுமையான ஆய்வின் பின்னரே இந்த பணத்தை உரிய தரப்பினருக்கு வழங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfpy.html
குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் ஒரே விதமாக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்: எஸ்.எம். மரிக்கார்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 01:43.23 PM GMT ]
கொலன்னாவ ஜூம்மா பள்ளிவாசலுக்கு நாற்காலிகளை வழங்கும் நிகழ்வு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் ஒரே விதமாகவே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
எமக்கு ஓர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு சிலருக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து.
நாட்டில் தற்போது வெள்ளைவான் கலாச்சாரம் இல்லை, குண்டர் குழு தாக்குதல் கலாச்சாரம் இல்லை.
எனினும், போதைப் பொருள் வர்த்தகத்தில் தொடர்புடையவர்களை குற்ற விசாரணைப் பிரிவின் பின் கதவின் ஊடாக அழைத்து விசாரணை செய்வதில் உடன்பாடு கிடையாது.
இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் சந்தேக நபர் ஒருவருக்கு எவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படுமோ அதேவிதமாக அனைவருக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைது செய்யப்படாமைக்கு அதிருப்தி வெளியிடும் வகையில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfpz.html
ரவிகரனை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 02:13.45 PM GMT ]
முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை நேற்று முன்தினம் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.
எனினும் விசாரணைக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ரவிகரன் தெரிவித்தார்.
இதேவேளை, ரவிகரனின் வீட்டில் இராணுவத் தளபாடங்கள் உள்ளன என்று கூறி கடந்த 5ம் திகதி வீட்டைச் சோதனையிட முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfp0.html
Geen opmerkingen:
Een reactie posten