[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 01:15.25 AM GMT ]
பொலன்னறுவை றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கல்லூரியின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப விஞ்ஞாபன கூடக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உட்பட அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களுடன் கல்விச் சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
எனது வாழ்வில் நான் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை வெல்வதற்கு எனது ஆத்ம நம்பிக்கை உறுதுணையாக இருந்துள்ளது. நாம் சில வேளை இலகுவானது பற்றியே சிந்திக்கின்றோம். கஷ்டம் என்றால் அதனை கைவிட்டு விடுகின்றோம்.
மாணவர்கள் தமது இலக்கு அல்லது சாதகமான வெற்றியை அடைய இத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பது முக்கியம். நான் இதுபோன்ற பலவற்றைக் கடந்தே இன்று நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளேன்.
நான் அப்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் நான் எனது பாடசாலையான பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 50 வருட நிறைவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. நான் மண்ணோடு மண்ணாகியிருப்பேன். அதுவே உண்மை நிலை.
தேர்தல் காலங்களில் மாலைப்பொழுதில் தொலைக்காட்சி பார்க்க எனக்கு நேரம் இருக்கவில்லை. எனினும் என்னைப் பற்றி என் நற் பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும் எந்தளவு மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை எனது நண்பர்கள் மூலம் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.
அரச ஊடகங்கள் என்னை எந்தளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அந்தளவு மோசமான சிந்தனைக்கு உட்படுத்தின. அரசியல் வாதிகளுக்கு இது போன்ற நிந்தனைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் நான் எதிர்கொண்டது மிக மோசமாக அமைந்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
சாதாரண அரசியல் வாதியொ ருவர் ஜனநாயக நாடொன்றில் முகங்கொ டுப்பது போலன்றி இது மிகக் கொடுமை யானது. நான் இந்த சந்தர்ப்பங்களில் எனது இந்த ரோயல் கல்லூரி மாணவர்கள் பற்றி கவலைப்பட்டேன். அவற்றைப் பார்க்கும் மாணவர்கள் இந்த பாடசாலையின் பழைய மாணவனான நான் இந்தளவு ஒழுக்கமில்லாத, நேர்மையில்லாதவனா என சிந்தித்திருக்க வாய்ப்புண்டு.
எனினும் இந்த நாட்டின் புத்திசாதுர்யமிக்க மக்கள் உண்மைக்குப் புறம்பானதை நம்பாது நாட்டுக்காக மக்கள் தமது தீர்ப்பினை வழங்கினர். அதனால்தான் எனது பாடசாலையின் 50வது வருட நிறைவு நிகழ்வில் இன்று ஜனாதிபதியாக இங்கு வருகை தர முடிந்துள்ளது. 732 வருடங்களுக்குப் பின் பொலன்னறுவையிலிருந்து நாட்டுத் தலைவர் ஒருவர் உருவாகியுள்ள சந்தர்ப்பம் இது.
இதனால் கடந்த கால முள் பாதை அனுபவங்களே கடும் சவாலான போராட்டத்தோடும் இந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர்.
புதிய அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் பல மாற்றங்களுக்கு நாம் வித்திட்டுள்ளோம். இந்த சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdisy.html
மஹிந்த ராஜபக்ச சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!- சம்பிக்க ரணவக்க
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 01:19.38 AM GMT ]
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் தண்டிக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சிலர், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக நடப்பு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளதாக தெரிவித்து வெளியிடப்பட்ட ஆவண விடயத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
இதேவேளை சகல ஊடகங்களையும் பயன்படுத்தி, 250 பில்லயின் ரூபா செலவு செய்தே 58 லட்சம் பேரின் வாக்குகளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்காக செலவிட்ட 250 பில்லியன் ரூபா பணத்தில் 90 வீதமானவை மக்களின் வரிப் பணமாகும்.
பொதுமக்களின் சொத்துக்களே அதிகளவில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
எஞ்சிய 10 வீதம் போதைப் பொருள் மற்றும் எதனோல் வியாபாரிகளினால் வழங்கப்பட்ட பணமாகும்.
எனவே கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் அனைத்திற்கும் பிரதான பொறுப்புதாரி மஹிந்த ராஜபக்சவே எனவும் அவரை தண்டிக்க வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdisz.html
தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு வராது!- ஜோன் அமரதுங்க நம்பிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 01:24.48 AM GMT ]
பொதுமக்கள் கட்டளை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க, இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு அது வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் நாடாளுமன்றம் மூன்று மாதத்துக்குள் கலைக்கப்படும் என்று அவர் செய்தித்தாள் ஒன்றுக்கான செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நம்பிக்கையில்லா பிரேரணை ஒரு பிரச்சினையல்ல என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசசபையில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் போது சிலருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன.
இதனை பெரிதாக்க குறித்த விடயத்தில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியே தம்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
குறித்த சம்பவத்துடன் தமக்கு தொடர்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பிரேரணையை சமர்ப்பித்துள்ள போதும் ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் புரிந்துணர்வுக்கு வந்துள்ளதாக அமரதுங்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdis0.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக நிறுத்த பொருத்தமுடையவர்!- வாசுதேவ நாணயக்கார
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 01:29.13 AM GMT ]
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்ட வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க முடியும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் ஒருவரைத் தெரிந்துää ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி நடாத்தக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 58 லட்ச மக்கள் வாக்களித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக நிறுத்த மிகவும் பொருத்தமுடையவர்.
மஹிந்தவிற்கு வாக்களித்த மக்களை நிர்க்கதியாக்காத ஓர் விரிவான அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdis1.html
ஐ.தே.க முக்கியஸ்தர்களின் ஊழல் மோசடிகளை கண்டறிய சுதந்திரக் கட்சி விசேட குழு அமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 01:50.19 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.
2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட உள்ளது.
பத்து பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக கிரமமான அடிப்படையில் கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றக் குழுவினர் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக இந்த வாரத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கோப் குழுவில் அங்கம் வகித்த காலத்தில் கண்டறிந்து கொண்டு வெளிப்படுத்திய தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலத்தில் கோப் குழுவின் உறுப்பினராக விசாரணை நடத்தி, நாடாளுமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.க வையும் இணைப்போம்: ஜனாதிபதி
இரு கட்சி ஆதரவாளர்கள் தமக்கிடையில் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளும் யுகம் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் போது அனைத்து கட்சிகளினதும் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தை வழங்கியது.
சிலநாட்களில் சிறிலங்கா சுதந்திர கட்சி என்னை தலைவராக ஏற்றுக்கொண்டது. எனவே, அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
இதே வேளை கடந்த காலங்களில் இடம் பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழுவொன்று நியமித்துள்ளதாக அரலங்வில பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdis3.html
Geen opmerkingen:
Een reactie posten