தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

மஹிந்த ராஜபக்ஸ இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளார் ?

சஜின்வாஸின் ஒருநாள் இரவு செலவு 21 லட்சம் ரூபா ! அதிரும் தகவல்கள் !

[ Feb 10, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 1330 ]
ராஜபக்ஸ ஆட்சியின் வெளிவிவகார கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் ஒரு வெளிநாட்டு பயணத்தின் போது ஹோட்டலில் தங்கிய ஒரு இரவிற்கு வெளிநாட்டு அமைச்சின் பணத்தில் 21 லட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டன் நகர் , மத்திய லண்டனில் பாக் லென்கி ஹில்டன் ஹோட்டலில் தங்கிய போதே சஜின்வாஸிற்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. 2014 ஏப்ரல் முதல்பாதியில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றிருந்த போது கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இந்த செலவை செய்துள்ளார்.
இந்த கட்டண பட்டியலை கண்ட அப்போதைய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோர் பணத்தை செலுத்த வெளிவிவகார அமைச்சில் அனுமதி கோரியுள்ளனர். அப்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த சேனுகா செனவிரட்ன சஜின்வாஸ் மீதுள்ள மயக்கத்தால் பணத்தை செலுத்த அனுமதி அளித்துள்ளார். சஜின்வாஸ் ஒரு இரவில் 21 லட்சம் செலவிட்டது தங்கி உண்டு குடிக்க மாத்திரம் அல்ல. அதிக பணத்தை கெசினோ விளையாட்டுக்கு செலவிட்டுள்ளார். சஜின்வாஸ் குணவர்த்தன தீவிர கெசினோ காரர் என அமெரிக்க மற்றும் பிரித்தானிய முன்னாள் இராஜதந்திரிகள் நன்கு அறிவர்.
சஜின்வாஸின் சட்டவிரோத வருமானம் மற்றும் உலகம் முழுக்க உள்ள சொத்து பொருட்கள் விபரம் குறித்த தகவல்களை உரிய ஆவணத்துடன் விரைவில் எதிர்பாருங்கள்...
http://www.athirvu.com/newsdetail/2235.html

மஹிந்த ராஜபக்ஸ இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளார் ?

[ Feb 10, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 1035 ]

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸ இரத்தினபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாரர்ளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியின் ஊடாக மகிந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் சில்லு சின்னத்தில் போட்டியிடுவார் என குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ, ராஜபக்ஸ குடும்பத்தின் கோட்டையாக வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேலும் சில முக்கியஸ்தர்களும் மகிந்தவோடு இணைந்து போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொலன்ன தேர்தல் தொகுதியுடன் மகிந்தவுக்கு எந்தவிதமான குடும்ப உறவோ அல்லது வேறும் வகையிலான தொடர்போ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், 1970களில் இளம் சட்டத்தரணியாக எம்பிலிபிட்டி நீதிமன்றில் கடமையாற்றி உள்ளதாகவும், எம்பிலிபிட்டிக்கு அருகாமையில் கொலன்ன தேர்தல் தொகுதி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Geen opmerkingen:

Een reactie posten