தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

விடுதலைப் புலிகளின் நிதிகளுக்கு என்ன நடந்தது? அரசாங்கம் விசாரணை



பொதுத்தேர்தலில் எம்மை ஆதரித்தால், பல்கலைக்கழக தெரிவை அதிகரிப்போம்: ரிசாட் பதியுதீன்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 03:42.11 PM GMT ]
பொதுத்தேர்தலில் மக்கள் எம்மை அங்கீரித்தால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்யும் வீதத்தை அதிகரிப்போம் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
மூன்று வீதமாக இருக்கின்ற எமது பல்கலைக்கழக வைத்திய தெரிவை மற்றும் நான்கு வீதத்தில் இருக்கின்ற பொறியியல் துறையை பத்து வீதமாக கொண்டு வர முடியும், அத்தோடு எங்களிடம் உள்ள அமைச்சுக்களை மற்றும் ஏனைய அமைச்சுகளின் உதவிகள் மூலம் எமது சமூகத்தை வளப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தனது பிரதேசத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் ஓட்டமாவடியில் இடம் பெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்!
இந்நாட்டில் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அதில் பதின்மூவாயிரம் இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். எமது சமூகம் சிதறிக் காணப்பட்டது. இந்த சமூகத்துக்கு வழிகாட்டுவதற்காக அஷ்ரப் அவர்கள் தனியான கட்சியை அமைத்து பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி சபை ஆகியவற்றிலே பிரதிநிதிகளை பெறுகின்ற சந்தர்ப்பத்தை பெற்றுத் தந்து இந்த சமூகத்தை தலை நிமிர்ந்து வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக சகல அர்பணிப்புக்களை செய்தார். தற்போது இச்சமூகம் பரிதாபமான நிலையிலே இருந்து கொண்டு இருக்கின்ற காலத்தினால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கட்சியை சகோதரர் அமீர் அலியுடன் சேர்ந்து நாங்கள் ஆரம்பித்தோம்.
நாங்கள் குறுகிய காலத்திற்குள் முன்னேறி பதின்மூவாயிரம் இலட்சம் மக்கள் எதிர்பார்த்த, முப்பது வீதமான சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்த இந்நாட்டிலே ஒரு நல்ல ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது நமது கட்சியை தைரியமாக இந்த சமூகத்தின் எதிர்பார்ப்பை, விருப்பத்தை, ஆட்சி மாற்றத்தை, நல்லாட்சியை கொண்டு வருகின்ற பாரிய பொறுப்புக்காக அர்ப்பணித்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி விளங்குகின்றது.
அதே போல் தான் மகிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்து முப்பது வருடம் யுத்தம் செய்து இல்லாத பொல்லாத துன்பங்களும், துயரங்களும், வேதனைகளும் அடைந்த ஒரு சமூகமாக இந்தச் சமூகம் எங்களுக்கு விடிவில்லையா, விமோசனமில்லை, நிம்மதியா வாழ்வில்லையா என்று துடித்துக் கொண்டிருந்த பொழுது மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியமைப்பதற்கு பக்க பலமாக நின்று சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதிலே, இருபது இலட்சம் மக்கள் நிம்மதியான பெருமூச்சு விடுவதற்காக அர்பணிப்பு செய்கின்ற சமாதானத்தை உருவாக்கியவர்கள் என்று நிரூபிக்கின்ற ஒரு கட்சியாக எங்கள் கட்சி காணப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஷவோடு சேர்ந்து உங்களை நிம்மதியாக வாழ வைக்க அர்ப்பணிப்பு செய்ததோ, அதேபோல கொண்டு வந்த அந்த ஆட்சி பொதுபல சேனாவுடன் இன்றும் சில நயவஞ்சகக் கூட்டங்களின் ஊடாக நமது மத நடவடிக்கைகளிலே கை வைத்த போது, நமது பொருளாதாரத்திலே கை வைத்த போது, நமது எல்லா விடயத்திலும் கை வைத்து இந்த சமூகத்தை அடிமைப்படுத்தி எங்களை ஒரு கோளைச் சமூகமாக, அரசியல்வாதிகள் கூட சவால் விடுகின்ற மதத்தலைவர்களான அவர்கள் மாறிய போது உள்ளே இருந்து போராடினோம், சண்டை பிடித்தோம், ஜனாதிபதியோடு பேசினோம், முரண்பட்டோம் அமைச்சரவையில், பாராளுமன்றத்தில் பேசினோம், அரச அந்த கூட்டத்திற்கு எதிராக தைரியமாக சென்று நீதிமன்றத்திலே பல வழக்குகளை அவர்களுக்கு எதிராக தொடுத்தோம்.
எனது அமைச்சுக்குள் வந்து அடாவடித்தனம் செய்த பொழுது ஜனாதிபதி மற்றும் பலர் வந்து சமாதானமாக போய்விடுங்கள் என்று சொன்ன போது அதையெல்லாம் நிராகரித்து இந்த பொதுபல சேனாவுக்கு எதிராக நாங்கள் வழக்கு தாக்கல் செய்தோம். காணிகளை பிடித்து வேறு நாட்டு முஸ்லிம்களை குடியேற்றுகின்றோம் என்று எங்களை குற்றம் சுமத்திய ஞானசாரர் தேரருக்கு எதிராக 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கேட்டு வழங்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த சமூகத்தை பாதுகாக்க இந்த ஆட்சி மாற்றம் வருவதற்காக நாங்கள் என்ன என்ன அர்ப்பணிப்புக்களை, தியாகங்களை செய்ய வேண்டுமோ நேர்மையாக, இதய சுத்தியோடு, தைரியமாக, உயிரைக் கூட பணயம் வைத்து அந்த முடிவுகளை அந்தக் காலங்களிலே நாங்கள் செய்தோம்.
இந்நாட்டில் வாழுகின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களைப் பற்றி பேசுகின்ற, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கட்சியை உருவாக்குவதற்கு மிக முக்கியமாக இருந்தவரும், கட்சியின் ஸ்தாபர்களில் முக்கியமாக இருக்கின்ற வரும், கல்குடாவின் அரசியல் தலைமையுமான பிரதியமைச்சர் அமீர் அலி நான்கு வருடங்கள் பதவி அந்தஸ்தில்லாமல் வேதனையோடு, அவருடன் சேர்த்து கல்குடா மக்களும் அவரின் ஆதரவாளர்களும் இருந்த பொழுது கட்சியின் தலைமையானது அரசாங்கத்தோடும், பசில் ராஜபக்ஷவோடும் வாக்குறுதி தந்த அரசின் முக்கியஸ்தர்களோடும் எல்லா வகையிலும் பேச்சுவார்த்தைகளில் பல முறை ஈடுபட்டோம். எங்களை அவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் அரச தரப்பினர் நயவஞ்சகத்தனமாகவே நடந்து கொண்டனர். கல்குடா மக்களும் ஓட்டமாவடி பள்ளிவாயலும் அதற்கு சாட்சியாகவுள்ளது. பசில் ராஜபக்ஷ கல்குடா பள்ளிவாயலுக்குள் வந்து வாக்குறுதி தந்ததை சகோதரர் ஹிஸ்புல்லா அதை மொழி பெயர்த்தது தங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த கல்குடா மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு வருடத்துக்கு தரவேண்டிய தேசிய பட்டியலை தேர்தல் நெருங்க அதைத் தந்தார்கள். அதை எடுப்பதா இல்லையா என்று நாங்கள் யோசித்தோம், பத்து நாட்கள் பொறுத்தோம் உங்களிடத்தில் வந்து கேட்டு நீங்கள் எடுங்கள் என்று சொன்னீர்கள்.
ஆகவே கட்சியானது யாரையும் ஏமாற்றி தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொள்ளவில்லை. எமக்களிக்கப்பட்ட வாக்குறுதியின் படி எமக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியல் ஆனத்தையே கட்சியும் சகோதரர் அமீர் அலியும் பெற்றுக் கொண்டோம். எமது கட்சி சென்ற அரசினை ஒரு போதும் ஏமாற்றி தேசியப் பட்டியலை பெற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அரசை விட்டுப் போக மாட்டோம் என்று அரசிடம் வாக்குறுதியளித்து விட்டு அமீர் அலியினுடைய தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொள்ளவுமில்லை. அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்காக எமக்கு தரப்படவுமில்லை.
அனைத்து கட்சிகளுக்கும் தேசிய பட்டியல் கொடுத்தார். எங்கள் கட்சிக்கு தரவில்லை. எங்களுக்கு தர வேண்டியதையே நாங்கள் பெற்றுக் கொண்டோம். அதே போலவே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளுக்கும் அரசாங்கம் கொடுத்ததைப் போலவே எமது கட்சிக்கும் தேசியப் பட்டியலைத் தாங்கள் ஆனால் கல்குடாவிலுள்ளவர்கள் சிலர் நாங்கள் ஏமாற்றி தேசியப் பட்டியலைப் பெற்றதாக விமர்சிக்கின்றார்கள்.
நாங்கள் நாட்டிலிருக்கின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களின் உரிமமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், மக்கள் நிம்மதியான வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக எமது போராட்டத்தினை தற்போது ஆரம்பித்துள்ளோம். அந்நிலையில் கல்குடாவிலிருக்கின்ற நீங்கள் உங்கள் சக்திமிக்கதும் அரசியல் சாணக்கியமுள்ள அரசியல் தலைமையான அமீர் அலிலை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்ற போராட்டத்தில் இறங்கி விடாதீர்கள். எவ்வாறு கல்குடாவிலிருக்கின்ற பிரதியமைச்சை அரசியல் தலைமையை பாராளுமன்ற உறுப்புரிமையை அழித்து கல்குடா சமூகத்தை அடிமைச் சமூகமாகவும், அரசியல் அனாதைகளாக மாற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட குற்றத்தை செய்த சமூகமாகி விடாதீர்கள் என கல்குடா மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
கல்குடா மக்களின் முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற தண்ணீர் பிரச்சனை, கல்வி சார் பிரச்சனைகள், பிரதேச சபை சம்பந்தப்பட்ட காணி, சம்பந்தப்பட்ட அலகுப் பிரச்சனைகள் போன்றவற்றை நாங்கள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுடன் செய்து கொள்ளப்பட்ட இருபது அம்சங்கள் அடங்கிய கோரிக்கையில் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளோம். அந்த வகையில் கல்குடா மக்கள் கண்ணை  கொண்டிருந்தாலும் அமீர் அலி அனைத்து பிரச்சனைகளையும் அவரின் தலைமையில் சுமந்தவராக அவருக்கு கட்சியின் தலைமை பக்க பலமாக இருந்து, கல்குடாப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புகின்ற பயணத்தை முன்னெடுப்போம் என்ற வாக்குறுதியைத் தருகின்றேன் என்றார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற கூட்டத்திற்கு, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex5.html
சரதியல் வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது: ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 03:49.00 PM GMT ]
சரதியல் வரவு செலவுத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செல்வந்தர்களிடமிருந்து பிடிங்கி ஏழைகளுக்கு வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை இந்த அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
மஹிந்த சிந்தனை என்ன செய்தது. ஏழைகளிடமிருந்து பிடிங்கி, செல்வந்தர்களுக்கு வழங்கியது.
கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்த நிலைமை நீடித்தது. இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பளங்களை உயர்த்தியுள்ளது.
பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வர்த்தகர்கள் இப்பொழுது சொல்கின்றார்கள் வரிச் சுமை அதிகம் என்று.  எங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வர்த்தகர்கள் கோருகின்றனர்.
ஒரு ஆண்டு காலம் பொறுமையுடன் இருக்குமாறு வர்த்தகர்களிடம் கோருகின்றோம்.
ஏழைகள் கடந்த பத்து ஆண்டுகளாக வரிச் சுமையை சுமந்தனர் என ரணில் விக்ரமசிங்க மாவனல்லையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சரதியல் என்ற நபர் செல்வந்தர்களிடம் கொள்ளையிட்டு அதனை அப்பாவி ஏழைகளுக்கு வழங்கியதாக இலங்கை வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex6.html
விடுதலைப் புலிகளின் நிதிகளுக்கு என்ன நடந்தது? அரசாங்கம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 04:03.23 PM GMT ]
இலங்கையின் முன்னாள் அரசாங்கத்துடன் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாவனல்லையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளின் நிதிகளுக்கு என்ன நடந்தது என்று அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னாள் அரசாங்கம், விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தது.
எனினும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மீது முன்னாள் அரசாங்கம் குற்றம் சுமத்தி வந்ததாக ரணில் தெரிவித்தார்.
போரின் பின்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல்கள், தங்கம் மற்றும் பணம் போன்றவை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில தம்மிடம் சாட்சியங்கள் உள்ளதாக வடக்கு மக்கள் கூறுவதாகவும் ரணில் குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் பாரியளவில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதாக ரணில் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவுக்கு தேவைப்படுகின்றவர் என்ற அடிப்படையில் கே.பி என்ற குமரன் பத்மநாதனை ஏன் முன்னாள் அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றும் ரணில் கேள்வி எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcex7.html

Geen opmerkingen:

Een reactie posten