தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

மகிந்தரின் உற்ற நண்பருக்கு கொழும்பில் விழுந்த பேரிடி: கலேஷ் ஷர்மா காலி !

சட்டவிரோதமான முறையில் ரணில் பிரதமராக்கப்பட்டார் சர்ச்சையை கிளப்பும் சரத் என் சில்வா !

[ Feb 01, 2015 03:42:35 PM | வாசித்தோர் : 10020 ]
சட்டவிரோதமான முறையிலேயே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சர்ச்சையை கிளப்பியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்னவும் அப்போதைய அமைச்சர்களும் மிகவும் நாகரீகமாக முறையில் அமைதியைப் பேணியுள்ளதாகவும், அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி வகித்த டி.எம் ஜயரட்ன பதவி விலகவில்லை, பதவியிலிருந்து விலக்கப்படவும் இல்லை இவ்வாறான ஓர் பின்னணியில் புதிதாக ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீளவும் பதவியில் அமர்த்தப்பட்ட விதம் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் ஒன்றினால் மட்டுமே மொஹான் பிரிஸின் நியமனத்தை ரத்து செய்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மதிக்கும் நபர் என்ற போதிலும்,அவருக்கு அருகாமையில் இருப்பவர்கள் அவரை பிழையாக வழிநடத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி என்பது சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நிலைமையையே குறிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் செய்த பிழைகளை இந்த அரசாங்கம் செய்வதனை தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2146.html

மகிந்தரின் உற்ற நண்பருக்கு கொழும்பில் விழுந்த பேரிடி: கலேஷ் ஷர்மா காலி !

[ Feb 01, 2015 03:57:12 PM | வாசித்தோர் : 18650 ]
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின்(காமன் வெலத்) கூட்டத்தை நடத்தவேண்டும் , அதனூடாக அதன் அடுத்த தலைவராக மகிந்த வரவேண்டும் என்று பல குறுக்கு வழிகளை கையாண்டவர் தான் இந்த கமலேஷ் ஷர்மா. இவர் ஒரு இந்தியர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்றைய தினம் இலங்கை சென்றுள்ளார். இவர் திடீரென இலங்கை செல்ல என்ன காரணம் என்று பலரும் எண்ணி இருக்கலாம். கமலேஷ் ஷர்மாவின் உற்ற நண்பரான மகிந்த ராஜபக்ஷ தற்போது அதிகாரத்தில் இல்லை. இன் நிலையில் இவர் மகிந்தருக்கு உதவிபுரியவே , இலங்கை சென்றதாக தகவல்கள் கூறுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து , மகிந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும். மேலும் பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியை மைத்திரி ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் கூறவே கமலேஷ் ஷர்மா சென்றுள்ளார். ஆனால் அவரால் இதுவரை மைத்திரிபாலவை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அத்தோடு அவருக்கு எதுவித சிறப்பான வரவேற்ப்பும் கொடுக்கப்படவில்லை. மேலும் இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரவே கமலேஷ ஷர்மாவை சந்தித்து உரையாடியுள்ளார்.
கமலேஷ் ஷர்மா யார் யாரை எல்லாம் சந்திக்கவேண்டும் என்று கேட்டிருந்தாரோ , அவர்களில் பலரை சந்திக்க தற்போதைய இலங்கை அரசு அனுமதிக்கவில்லை என்ற செய்தியும் கொழும்பில் இருந்து கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயம் புஸ்வானம் ஆகிவிட்டது.
http://www.athirvu.com/newsdetail/2147.html

Geen opmerkingen:

Een reactie posten