[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 01:46.52 PM GMT ] [ பி.பி.சி ]
அந்த விசாரணை தற்போது முடிவடைந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகின்றார்.
இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அறிக்கையை அடுத்த மாத இறுதியில் வெளியிடாமல் சிறிது காலம் பிற்போடுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணங்களையும் மேற்கொண்டு உரிய தரப்புக்களுடன் சந்திப்புக்களையும் நடத்தியுள்ளார்.
சர்வதேச பங்களிப்புடன் உள்நாட்டில் நம்பகத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும் என்று புதிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தும் உள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா. சம்பந்தன்,
ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும்.
அந்த அறிக்கையை இல்லாமல் செய்வதோ அல்லது தாமதமாக வெளியிடுவதோ ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஆகியோருடன் இடம்பெற்றிருந்த சந்திப்புகளின் போதும் இதனை தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவிக்கின்றார்.
'அந்த அறிக்கை வெளிவர வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களால் கூட உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போரின் போது இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று வடக்கு மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், அந்த தீர்மானம் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மைத்திரிபாலவின் இந்திய விஜயம் முக்கியமானதொன்று!- இந்திய செய்தித்தாள்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 02:15.14 PM GMT ]
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது இந்திய விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொள்கிறார்.
ஏற்கனவே இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவும் இலங்கையில் பல ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது.
எனினும் 80களில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக இந்த உறவில் பிரச்சினை ஏற்பட்டது.
இது 2008 மற்றும் 2009ம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்த உறவில் திருப்பம் ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கான போரின் போது இந்தியாவும் இலங்கைக்கு உதவியது.
இது, மஹிந்த ராஜபக்சவை இலங்கையின் சிங்கள மக்கள் மத்தியில் வீரராக உருவாக்கியது.
இந்தநிலையில் அவரின் சீனாவை நோக்கிய உறவு பலப்படுத்தல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பனிப்போரை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழ்நிலையிலேயே எதிர்க்கட்சியுடன் இணைந்த மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகி இந்தியாவின் உறவை புதுப்பிக்க தலைப்பட்டுள்ளார்.
எனவே மைத்திரிபாலவின் இந்திய விஜயம் முக்கியமானது என்று இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfw0.html
Geen opmerkingen:
Een reactie posten