இலங்கை விசாரணை அறிக்கை தொடர்பில் அமெரிக்கா...
|
இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கை தொடர்பில் தீர்மானிக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹ_செய்னேயாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளில் சமர்ப்பிப்பதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதா என்பதனை அவரே தீர்மானிக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பெசாகீ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் உண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் கைகளிலேயே தங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆணையளாரின் மீது நம்பிக்கை காணப்படுவதாகவும் சரியான தீர்மானத்தை எடுப்பார் என கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி பல்வேறு விடயங்கள் குறித்து பேசியதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 100 நாள் திட்டம், நல்லிணக்க முனைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் 30 ஆண்டு காலம் யுத்தம் இடம்பெற்றுள்ள நிலையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய சர்வதேச கடப்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என ஜோன் கெரி வலியுறுத்தியதாக, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கவும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். சிறந்த வழிகளில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். |
14 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423913706&archive=&start_from=&ucat=1&
மங்கள சமரவீரவும் பான் கீ மூனும் முக்கிய பேச்சு (படம் இணைப்பு)
|
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நேற்றைய தினம் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை மூடிய கதவு பேச்சுவார்த்தையாகவே நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், மனித உரிமை மீறல் விவகாரம் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவினை வழங்கத் தயார் என பான் கீ மூன் உறுதியளித்துள்ளார். புதிய அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தொடர்ச்சியாக இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
 |
14 Feb 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423913834&archive=&start_from=&ucat=1&
| 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் இரா.சம்பந்தன் |
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுத் திட்டம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான தொடர்புகளை பேண வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். |
14 Feb 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423913987&archive=&start_from=&ucat=1&
|
|
|
Geen opmerkingen:
Een reactie posten