[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:01.55 AM GMT ]
அதில், வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
தாம், போரினால் மற்றும் வன்முறைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் உள்நாட்டில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் என்பவற்றினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் உண்மையான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளனர்.
இதன்மூலம் இலங்கையில் உண்மையையும் நீதியையும் கொண்டு வரமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் 67வது சுதந்திரத்தினத்தின்று வெளியிடப்பட்ட சமாதான பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.
எனவே அதனை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் உள்ளூரில் அமைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளின்மூலம் நியாயத்தை எதிர்ப்பார்ப்பதாக வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களும் அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
உள்நாட்டில், உண்மையை கண்டறியும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் 28வது மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhw2.html
சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் எண்ணம் கிடையாது: டியூ.குணசேகர
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:10.44 AM GMT ]
இலங்கையின் முற்போக்கு கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் நிலவி வரும் கருத்து முரண்பாடு தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.
இந்தத் திட்டமானது சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் திட்டமாகவே கருதப்பட வேண்டும். எந்தவொரு கட்சியையும் பிளவுபடுத்தும் தேவையோ அவசியமோ எமக்குக் கிடையாது.
எங்களுக்கு போதியளவு வேலைகள் உள்ளன என டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
மைத்திரி – மோடிக்கிடையில் 45 நிமிட சந்திப்பு!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:35.54 AM GMT ]
குறித்த சந்திப்பு 45 நிமிடங்கள் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான குழு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளது.
இப்பயணத்தின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் குறித்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது இந்தியா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும்: டக்ளஸ்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:32.55 AM GMT ]
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். கடந்த அரசிடமும் இதனை நாம் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தற்போது இந்த அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் இலகுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தற்போது யாழ்.மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இடப்பெயர்வுகள் மற்றும் கடந்தகால யுத்த அழிவுகள் காரணமாக எமது மக்கள் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புலம்பெயர் வாழ் மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படும் பட்சத்தில் அம் மக்கள் வாக்களிக்கக் கூடிய வசதிகளையும் மேற்கொண்டால் இந்நிலைமாற்றமடைவதுடன், இதுவரை காலமும் இருந்துவந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மீண்டும் பெற முடியும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhw4.html
Geen opmerkingen:
Een reactie posten