தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

ஐ.நா மனித உரிமைகள் அறிக்கை பிற்போட எதிர்பார்க்கும் இலங்கை! வொஸிங்டனில் மங்கள தெரிவிப்பு

மகிந்தவுக்கும் மொஹான் பீரிஸிற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை: விஜயதாச ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:53.14 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும், முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை என இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் அரசியலில் ஈடுபட்டதை நேற்று இடம் பெற்ற ஊடக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களின் நிலையை தற்போதைய அரசாங்கம் மாற்றக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விஜயதாச குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நேரடி சேவையை ஆரம்பித்தது எயார் சைனா!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:43.58 AM GMT ]
 பாரிய விமான சேவையான எயார் சைனா, நேற்று முதல் இலங்கைக்கான நேரடி சேவையை ஆரம்பித்துள்ளது.
சீனாவின் இந்த சேவை, சென்டு மற்றும் கொழும்புக்கு இடையில் நடத்தப்படுகிறது.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு, நேற்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் சீன தூதுவர் வூ ஜியான்கோ ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
எயார் சைனா, 187 நகரங்களையும் 78 சர்வதேச வானூர்தி பாதைகளையும் இணைத்து செயற்பட்டு வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhw0.html

கடற்படையின் புதிய பேச்சாளராக இந்திக சில்வா தெரிவு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:45.50 AM GMT ]
இலங்கைக் கடற்படையின் புதிய பேச்சாளராக கமாண்டர் இந்திக சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடற்படைப் பேச்சாளராக இதுவரை காலமும் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கடமையாற்றி வந்தார்.
கோசல வர்ணகுலசூரிய மூன்று கடற்படைத் தளபதிகளின் கீழ் பேச்சாளராக கடமையாற்றியுள்ளார்.
பீ.543 ரக கப்பலின் கட்டளை அதிகாரியாக கோசல நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக போர் இல்லாத காரணத்தினால் முப்படையினரின் பேச்சாளர் பதவிகள் ரத்து செய்யப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 10 பேருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி கிடையாது!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:41.28 AM GMT ]
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பத்து பேருக்கு இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆட்சிக்காலத்தில் குற்றச் செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என கட்சி அறிவித்துள்ளது.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட சிலர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை புகழ்ந்து பாடி வருகின்றனர்.
குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மேலும் சிலர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீளவும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhv7.html

பிரபல ரகர் வீரர் தாஜூடீனின் மரணம் தொடர்பில் மீள் விசாரணை: சிக்குவாரா யோசித ராஜபக்‌‌ஷ
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:21.42 AM GMT ]
இலங்கை தேசிய அணியின் முன்னணி ரகர் வீரர்களில் ஒருவரான மொஹமட் தாஜூடின் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார்.
அவர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம்  வாகனத்தில் போட்டு எரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோசிதவிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்களில் அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல அரசியல் மறைகரமொன்று செயற்பட்டதனால் விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாஜுடின் கொலை தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
காதலி ஒருவர் தொடர்பில் இந்த முரண்பாடு நீடித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நரஹேன்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உடல் கருகி தாஜுடின் உயிரிழந்தார். எனினும் தாஜுடினின் பணப் பை வேறும் ஓர் இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே மரணம் தொடர்பில் நிலவி வரும் மர்மங்களைக் களைய மீளவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் அறிக்கை பிற்போட எதிர்பார்க்கும் இலங்கை! வொஸிங்டனில் மங்கள தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:03.39 AM GMT ]
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை பல மாதங்களுக்கு பிற்போட தமது நாடு எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஸிங்டனில் வைத்து இந்த கருத்தை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளதாக ரொய்ட்டர் தெரிவிக்கிறது.
இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த விடயத்தை கையாள்வதற்கு பொறிமுறை ஒன்றை அமைக்கும் வரையில் இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்று தமது நாடு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதம், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் கீழ் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு இணங்கப்பட்டது.
இதன்கீழ் விசாரணைகளும் நடத்தப்பட்டு அதன் அறிக்கையே எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் பேரவையின் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டிருக்குமானால், தமது உள்நாட்டு பொறிமுறையையும் பேரவை பரிசீலிக்க முடியும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஆகஸ்ட் மாதம் வரைக்கும் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை பேரவை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை குறித்த அறிக்கையின் வெளியிடல் தாமதமாக்கப்படுமா? என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேச்சாளர் ருபர்ட் கொல்விலியை ரொயட்டர் கேட்டபோது, அவர் கருத்து எதனையும் கூற மறுத்து விட்டார். எனினும் மார்ச் 25ஆம் திகதி அறிக்கையை வெளியிட தாம் அட்டவணையை தயாரித்துள்ளதாக கொல்விலி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhv5.html

Geen opmerkingen:

Een reactie posten