தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

புலத்து மக்களின் போராட்டத்தை கூர்மைப்படுத்தியுள்ள இனவழிப்பு தீர்மானம்

துமிந்த சில்வாவை கைது செய்யாமை சிக்கலான விடயம்: ஹிருணிக்கா
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 04:00.39 AM GMT ]
போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யாமல் இருப்பது சிக்கலான விடயம் என ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வா தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவு மேற்கொள்கின்ற விசாரனை நடவடிக்கை ஊடுருவல் குறைவாக இடம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுவதாக கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதம வேட்பாளராக மகிந்த வேண்டாம்: பிரசன்ன ரணதுங்க
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 04:31.11 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் பிரதம வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் எதிர்ப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பிரதம வேட்பாளராக புதிய தலைவரை நியமிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மகிந்தவின் ஆதரவுகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டாவது தொடர் குறைபாடுகள் இம்முறை தேர்தலில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் மேலும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தை பராமரிக்க கடினமாக இருக்கும் என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhxz.html

நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பிற்கு மேலும் 5 புதிய நீதிமன்ற வளாகங்கள்!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 04:42.52 AM GMT ]
நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பிற்கு மேலும் 5 புதிய நீதிமன்ற வளாகங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உடுகம, பிபில, சியம்பலாண்டுவ, கல்பிட்டிய மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு புதிய நீதிமன்ற வளாகம் அமைக்கப்படவுள்ளது.
உடுகம புதிய நீதிமன்ற வளாகம் இன்று நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
பிபில மற்றும் சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகங்கள் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளதோடு கல்பிட்டிய மற்றும் ஆனமடு சியம்பலாண்டுவ நீதிமன்ற வளாகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புலத்து மக்களின் போராட்டத்தை கூர்மைப்படுத்தியுள்ள இனவழிப்பு தீர்மானம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 04:10.01 AM GMT ]
வடமாகாண சபையில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தமிழின விடுதலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதுக்கு கடினமாக உழைத்தவர்களுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் தலைவணங்குகின்றோம்.
இதே போன்ற கோரிக்கையினை தமிழக சட்டசபை நிறைவேற்றியிருந்ததுடன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆகிய நாம் அனைவரும் இத்தகைய கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தை நோக்கி தெளிவாக முன்வைத்து நிற்கின்றோம்.
இந் நிலையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தீர்மானம் என்பது அனைத்துலக சமூகத்துக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தி தாயக, தமிழக மற்றும் புலத்து தமிழ் மக்களின் முனைப்பு அரசியலை மீண்டும் கூர்மைப்படுத்தி உள்ளது.
தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அதன் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றுவதற்காக கண்துடைப்பிற்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழு என்பதனாலும் உள்ளக விசாரணை என்பதும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையே அவர்கள் செய்த குற்றங்களை விசாரிக்க கோரும் அடிப்படை நியாயமற்ற இயற்கை நீதிக்கோட்பாட்டிற்கு மாறான செயல் என்பதனாலும் நாம் அதை ஏற்கனவே நிராகரித்திருந்தோம்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக் கூடியவாறும், அவர்களின் நலன்களை பேணக்கூடியவாறும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் தேசத்தின் மீது தொடர்ந்தும் புரியப்படுகின்ற இனவழிப்பு, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றை நிரந்தரமாக நிறுத்தப்படக்கூடியவாறானதுமான ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நாடாத்த வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்தும் தாயகத்தில் வாழும் உறவுகளும், தமிழக உறவுகளும், புலம்பெயர் தமிழ் உறவுகளும் போராட வேண்டுமென்று இத் தருணத்தில் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhw7.html

Geen opmerkingen:

Een reactie posten