தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை மகிந்தவுக்கு?

உலக முடிவைக் காணச் சென்று 3 மணிநேரம் மரத்தில் தொங்கிய வெளிநாட்டவர் உயிருடன் மீட்பு
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 12:00.42 PM GMT ]
உலக முடிவு என அழைக்கப்படும் அம்பேவலை ஹோட்டன் (Horton) சமவெளி பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மனிதா என்ற 35 வயதுடைய நபரே மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கி போராடிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதா என்ற நபரும் அதே நாட்டை சேர்ந்த லின்டா என்ற 31 வயது பெண்மணியும் கடந்த 10.02.2015 அன்று நாட்டில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
திருமணத்தின் பின்பு இவர்கள் இருவரும் கடந்த 14.02.2015 அன்று தமது சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதன் பின்பு நேற்று மாலை நுவரெலியா வருகை தந்த இவர்கள், இன்று அதிகாலை 4.30 மணியளவில் நுவரெலியாவில் இருந்து புறப்பட்டு உலக முடிவு பகுதியை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் இவர்கள் இருவரும் தன்னை அழைத்து வந்த இவர்களின் வழிகாட்டியை விட்டு விட்டு உலக முடிவு பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற இவர்கள் காலை 8.50 மணியளவில் புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் கால் தவறி மனிதா என்ற நபர் பாதாளத்தில் பின்புறமாக விழுந்துள்ளார்.
இதன்போது அதிஸ்டவசமாக ஒரு மரத்தில் விழுந்த இவர் அதனை கட்டியணைத்தபடி போராடியுள்ளார்.
பின்பு பொலிசாருக்கும் படை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
இதன்போது நுவரெலியா மூன்றாவது சிங்க படை பிரிவை சேர்ந்த கோப்ரல் சுதேஸ் லலிந்த என்பவர் இவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.  அதற்கு பொலிசாரும் வான்படையினரும் உதவி புரிந்துள்ளனர்.
பின்பு இவர் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையின் பின்பு இவர்களுடைய பயணத்தை தொடர்ந்தனர்.
தொடர்புடைய செய்தி- உலக முடிவைக் காணச் சென்ற வெளிநாட்டவர் மாயம்
http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr4I.html


சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை மகிந்தவுக்கு?
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 12:17.49 PM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகள் உட்பட உள்ளூராட்சி சபைகளின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை அறிவிக்குமாறு வலியுறுத்தி சகல உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுகேகொடையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், அந்த கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களுடன் இந்த விடயம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி, அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பான 4 முக்கிய அரசியல் தரப்புகள் தற்போது இரவு பகல் பாராது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் உட்தரப்பு பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுடன் தனிப்பட்ட ரீதியில் பழகும் நண்பர்கள் ஒரு தரப்பாகவும் 2010 ஆம் ஆண்டு அரசாங்கத்தை அமைக்க முன்னின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தரப்பாகவும் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான மாகாண முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஒரு தரப்பாகவும் முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தலைமையிலான சிரேஷ்ட தலைவர்கள் ஒரு தரப்பாகவும் தனித்தனியாக இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தனித்தனியாக செயற்பட்டு ஒரு அணியாக சென்று, தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளை ஒன்றிணைக்க இவர்கள் கட்சிக்குள் பெரும் போராட்டத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தரப்பை இணங்க வைப்பதே இவர்கள் எதிர்நோக்கும் சிரமமான பணி எனக் தெரிவிக்கப்படுகிறது.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5A.html

Geen opmerkingen:

Een reactie posten