தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

தகவல் அறியும் சட்டத்தை அரசியலமைப்பில் உள்ளடக்கத் தீர்மானம்

கிடப்பில் போடப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான விசாரணை
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 11:40.29 AM GMT ]
கிழக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு காணிகளை தனது நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்தளித்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக காணி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த அவர், தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியை பெற்றுள்ளதன் காரணமாகவே இந்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்களை கிராமங்களில் குடியேற்றும் போர்வையில் அரசுக்கு சொந்தமான காட்டு நிலங்களை கூட இந்த அமைச்சர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் கொடுத்துள்ளதாக அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.
அமைச்சரை பாதுகாக்கவே அரசாங்கம் அவருக்கு எதிரான விசாரணைகளை முடக்கியுள்ளதாகவும் இது மக்களுக்கு செய்யும் பாரிய அநீதி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr4E.html


இலங்கையர்களின் கறுப்பு பணம் குறித்து விசாரணை நடத்தும் சுவிஸ்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 11:47.49 AM GMT ]
சுவிற்ஸர்லாந்தில் உள்ள வங்கிகளில் 92 இலங்கையர்கள் வைப்புச் செய்துள்ள 28 மில்லியன் டொலர்கள் அதாவது 7 பில்லியன் ரூபா பணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுவிற்ஸர்லாந்து வழக்குகள் தொடர்பான பணிப்பாளர் ஒலிவர் ஜெனாட் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
சட்டவிரோத நிதி வர்த்தகம் குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
92 இலங்கையர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் சுவிஸர்லாந்து அரசாங்கத்தின் வழக்குகள் தொடர்பான பணிப்பாளரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன.
இந்த இலங்கையர்களில் ஒருவருக்கு சுவிஸ் வங்கியில் ஒரு பில்லியன் ரூபா பணம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


தகவல் அறியும் சட்டத்தை அரசியலமைப்பில் உள்ளடக்கத் தீர்மானம்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 11:52.24 AM GMT ]
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தகவல் அறியும் சட்டத்தை, அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஒரு பகுதியாக 19 வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் மனித உரிமை தொடர்பான விடயத்துடன் தகவல் அறியும் சட்டமும் முன்வைக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான, ஊடக பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.
 
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr4H.html

Geen opmerkingen:

Een reactie posten