[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 02:36.40 AM GMT ]
இதன்படி பொலிஸாரால் சில சந்தர்ப்பங்களில் கலவர நிலையை சமாளிக்க முடியாதபோது படையினரை வரவழைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மாதம் இரண்டாம் திகதியன்று, கடந்த அரசாங்கம் பிறப்பித்திருந்த குறித்த கட்டளை முடிவடையவிருந்தது.
எனினும் அதனை தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஒரு மாதக்காலத்துக்கு நீடித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த கட்டளை அவசியமற்றது என்ற தமது நிலைப்பாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வடக்கு அதிவேகப் பாதைக்கான ஒப்பந்த பணம் ஒரே இரவில் 60 பில்லியன்களாக குறைப்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 02:59.50 AM GMT ]
இந்த தகவலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியில் குறித்த ஒப்பந்தங்களை செய்து கொண்டவர்களே இந்த 60 பில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டையும் ஏற்றுள்ளார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம், எம்ஐஜி விமானக் கொள்வனவுக்கு 12 மில்லியன் டொலர்களே தேவையென்றபோதும் 500 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை காலிமுகத்திடலின் முன்னால் அமைக்கப்படும் சங்காய் ஹோட்டல், சிஏடிசி திட்டம் என்பவற்றுக்காக காணிகள் விற்பனை செய்யப்பட்ட பணம், பாதுகாப்பு அமைச்சின் கணக்குக்கு சென்றுள்ளது.
இதில் சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் திறைசேரியின் அனுமதியின்றி செலவிடப்பட்டுள்ளன. இதனை தவிர பல பில்லியன் ரூபாய்களுக்கான கணக்குகளை காணவில்லை என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
ஊழல் மோசடிகள் இன்றி சீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் வழங்கப்படும்- நிதி அமைச்சர்
ஊழல் மோசடிகள் இன்றி சீன அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எமக்கு எவ்வித முரண்பாடும் கிடையாது.
அரசாங்கத்தினால் அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளையே நாம் எதிர்க்கின்றோம்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக பாரியளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
ஆட்சி மாற்றத்துடன் சீனா தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
சீன அரசாங்கத்துடன் பேணி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன துணை வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பாரியளவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதே எமது பிரதான நோக்கம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அண்மையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdju4.html
சரத் பொன்சேகாவுடன் கைதான இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு நியாயம் கிடைக்கவில்லையாம்?
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:11.20 AM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட போது அவருடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ராஜ துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக விசாரணை நடத்தப்பட்டது.
புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தவிர்ந்த ஏனைய உத்தியோகத்தர்கள் நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் குறிப்பிட்ட படையணிகளுக்கு புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
சில மாதங்களின் பின்னர் அப்போதைய அரசாங்கம் இவர்களை புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கி, சாதாரண படையணிப் பணிகளில் ஈடுபடுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இந்த அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.
இந்தப் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்றும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட பூரண சுதந்திரம் தமக்கும் வழங்கப்பட வேண்டுமென இந்தப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdju5.html
Geen opmerkingen:
Een reactie posten