[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:34.26 AM GMT ]
கிளிநொச்சி விவேகானந்த நகர் மேற்கை சேர்ந்த நவரத்தினராசா கௌசிகன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ் இலக்கத்துடன் அல்லது அருகிலுள்ள காவல்துறை நிலையங்களில் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு - 0776231011
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdju6.html
ஜனாதிபதி இன்று பொலன்னறுவைக்கு விஜயம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:35.26 AM GMT ]
பொலன்னறுவை ராஜகிய பாடசாலையின் 50வது வருட பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வின் பின்னர் பாடசாலையின் தொழிநுட்ப ஆய்வு கூடம் ஜனாதிபதி கையால் திறந்து வைக்கப்படும்.
குறித்த நிகழ்வின் பின்னர் அரலங்வில பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில மாலை 2 மணிக்கு கலந்துகொள்ளும் ஜனாதிபதி மீண்டும் மந்திரிகிரிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில் மாலை 3 மணிக்கும் கலந்துகொள்ளவுள்ளார்.
வட மத்திய மாகாண முதல் அமைச்சரும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
பதவியை தக்கவைப்பதற்காக எந்த பேயுடனும் மு.கா.சேரும்: ஜனா
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:46.43 AM GMT ]
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதியாக எது நடக்கும் என எதிர்பார்த்தோமோ அதுவே கிழக்கு மாகாணசபையில் ஆட்சி விவகாரத்திலும் நடந்துள்ளது.
தலைவர் அஸ்ரப்பின் பின்னரான மு.கா.நடவடிக்கைகளை அவதானித்துவரும் எவரும் இதுதொடர்பில் ஆச்சரியம் கொள்ளமாட்டார்கள். ஆனால் அனைவரும் ஆச்சரியபடுவது தமது செயற்பாட்டுக்கு கவுண்டமனி-செந்தில் நகைச்சுவையை விஞ்சும் அளவுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கத்திற்கேயாகும்.
கடந்த மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்ததன் காரணமாகவே இந்த அரசாங்கம் வடமாகாணசபையை நடத்தியது என்றும் அத்தேர்தல் நடத்தப்பட்டதற்கு உரிமைகோருகின்றார்கள். தங்களது கனவான கரையோர மாவட்ட கோரிக்கையினை துணிவுடன் கேட்கமுடியாதவர்கள்.
வடமாகாணசபை தேர்தலை நடத்தக்கோரினார்கள் என்றால் இவர்களை எப்படி சொல்வது.தமக்கு கூரையேறி கோழி பிடிக்கமுடியாதவர்கள் எமக்கு வானம் ஏறி வைகுண்டம் காட்டினார்களாம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட இறுதிவரை மதில்மேல் பூனையாக இருந்து இறுதி ஒரு வாரத்துக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து கொள்கை பிடிப்புடன் வெளியேறி தபால் மூல வாக்காளர்கள் உட்பட முஸ்லிம் மக்களுக்கு வாக்களிக்கும் திசையை காட்டி முஸ்லிம் மக்களை வழிப்படுத்தியவர்கள் தற்போது ஜனாதிபதி தேர்தல் முடிந்து மூன்று வாரம் முடிந்த நிலையில் மீண்டும் அதே கொள்கைபிடிப்புடன் உறவை அறுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியை அமைத்துள்ளனர்.
இதற்கு சாட்சியாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இழுக்கின்றார்கள். எனக்கு இவர்களை நினைக்கும்போது முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கூறியது ஞாபகத்துக்கு வருகின்றது.அவர் கூறினார் கம்யூனிசத்தை எதிர்க்க எந்த பேயுடனும் கூட்டுச்சேர தயார் என்றார்.
இது அவரது கொள்கை சார் விடயம்.ஆனால் மு.கா.வின் கொள்கை சார்விடயமோ பதவிக்காக எந்தப்பேயுடனும் கூட்டுச்சேரவோ,கூட்டைப்பிரிக்கவோ தயார்.அவர்களின் இறுதி மூச்சு பதவியே ஒழிய இனம்சார் செயற்பாடு எதுவும் இல்லை என்பதாகும்.இவ்வாறே முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் நான் கருதுகிறேன்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjvy.html
Geen opmerkingen:
Een reactie posten