[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:25.17 AM GMT ]
23.01.2015ல் வெளியான சிறப்புக் கட்டுரையில் இஸ்லாமிய தமிழருக்கே ஆளுனர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஆதாரங்களை முன்வைத்து குறிப்பிட்ட போதும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள பழிவாங்கியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகி ஐ.தே.கட்சியில் சேர்ந்தாலும் பொத்துவிலைச் சேர்ந்த மனித நேயம் படைத்தவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவிலின் முதல் சிரேஷ்ட பொலிஷ் அத்தியட்சகரும், முன்னாள் அம்பாறை மாவட்ட பாதுகாப்பு இணைப்பாளரும், மாகாண சபை உறுப்பினருமான ஜனாப் எம்.எ. அப்துல் மஜீத்திற்கே மனிதப் பண்போடு ஆதரவளிப்பது மிகப் பொருத்தம் என 23.1.2015ல் தமிழ்வின் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ஏனெனில் குறித்த அமைச்சர் குழப்ப மாட்டார் எனக் கருத முடியாது இருந்தது. காரணம் கிழக்கில் த.தே.கூட்டமைப்பு, முதலமைச்சர் பதவி இஸ்லாமிய தமிழ் மகனிற்கே என்று கூறியும் தனது அமைச்சர் பதவி மோகத்திற்காக ஏமாற்றியவர் என்பதால் இதனைக் கருத வேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்கள் தனக்கு ஒப்பான ஒருவரே முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கருதி மற்றைய அனுபவசாலிகளை புறந்தள்ளியமை அவரது இயற்கை குணம் என்றே கருத வேண்டும். கல்முனை சாயந்தமருதில் நடந்த ஆர்ப்பாட்டம், 6.2.2015ல் வெளியான கட்டுரை உணர்த்துகின்றது.
இதனை மையமாகக் கொண்டே கிழக்கில் தமிழ் மொழியிலான அமைப்பினை அனைத்து மதங்களும் உள்ளடக்கிய தமிழ்மொழித் தமிழர் என்று ஐக்கியப்பட அறை கூவல் விட்டிருந்தேன். இது காலத்தின் கட்டாயத் தேவை. அல்லது த.வி.கூட்டணி, இஸ்லாமிய தமிழ் மொழிக்கட்சிகள் ஒன்று கூடி இந்தியாவில் நடைபெற்ற அண்ணன் அமிர்தலிங்கம், சிம்மக் குரலோன் சிவசிதம்பரம் ஐயா, இலங்கையில் இருந்து சென்ற இஸ்லாமிய அமைப்புக்களின் ஏகோபித்த முடிவில் கைச்சாத்தான ஆவணம் ஓன்று பொத்துவில் ஜனாப் எம்.ஏ.அப்துல் மஜீத் அவர்களிடம் உள்ளது பற்றி வியாபித்திருந்து ஒன்றிணையுமாறு கருத்து வெளியிட்டிருந்தேன்.
இவ்விடயம் தற்கால அரசியல் வாதிகளுக்கு தெரியாமலும் இருக்கலாம் என்பதற்காக அதனையும் வெளிப்படுத்தியிருந்தேன். இவற்றை எல்லாம் தேசியப் பத்திரிகைக்கு எழுதினாலும் பிரசுரமாவதில் தடை ஏற்படும் என்பதால் தமிழ்வின்னில் கட்டுரையாக எழுதியுள்ளேன்.
சமைய வழிபாடு, ஓரளவு கலாச்சார ஒற்றுமை, திருமணம் செய்து வாழும் நிலை என்பனவற்றால் சைவ, இந்து, கிறிஸ்தவ தமிழ் மக்கள் பெரும்பான்மை மொழியுடன் இயைந்து செயல்படும் வீதம் கிட்டத்தட்ட 60 வீதத்திற்கு மேல் உள்ளன. என கிழக்கு சைவ, இந்து, கிறிஸ்தவ தமிழ் மக்கள் நினைத்து செயல்பட வைக்கும் நிலைக்கு முஸ்லிம் காங்கிரசின் பிழையான போக்கு வரலாற்றில் அமைய வழி வகுக்கும் என்பது திண்ணம்.
இம் முதலமைச்சர் யார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மூதை உறுப்பினர்கள் தெளிவுபடுத்தி வருவதுடன் இவ் கிழக்கு முதலமைச்சர் ஒரு பொது நலவாதியா? சைவ, இந்து, கிறிஸ்தவ தமிழ் மக்களுக்கு எதிரான
இனவாதியா? என்பதனை இவர் விவசாய அமைச்சராக இருந்த போது அவரது அமைச்சின் கீழ் இயங்கிய நிர்வாக உத்தியோகத்தர்கள் விசனமடைந்த நிலையில் பரவலாக பேசப்பட்ட விடயங்களை உங்களின்
கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் நீங்களே தீர்மானியுங்கள்.
இனவாதியா? என்பதனை இவர் விவசாய அமைச்சராக இருந்த போது அவரது அமைச்சின் கீழ் இயங்கிய நிர்வாக உத்தியோகத்தர்கள் விசனமடைந்த நிலையில் பரவலாக பேசப்பட்ட விடயங்களை உங்களின்
கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் நீங்களே தீர்மானியுங்கள்.
01).இவரின் 2வருட ஆட்சியில் இவரால் வழங்கப்பட்ட 40 நியமனங்களில் 38 நியமனங்கள் இஸ்லாமிய தமிழர்களே. 2 ஏனைய சமய தமிழர்களே. பாராளுமன்ற விகிதாசாரம் இங்கு பேணப்படவில்லை. இன்று ஊழல் பற்றி அரசு முனைப்பாக இருப்பதால் ஆளுனர் இது சம்பந்தமாக தலையீடு செய்து உண்மையினை மக்களுக்கு தெளிவுபடுத்தல் அவரது பொறுப்பு கூறும் தலையாய கடமை என பொதுமக்கள் சிந்திப்பது தவறாகாது.தனது சொந்த ஊரில் 20 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா எனச்சந்தேகம் எழுந்துள்ளது.
02).அமைச்சராக இருந்த போது இவர் திட்டமிட்டமுறையில் பதவி மூப்பின்றி முஸ்லிம்களை நியமித்தமையால் சேவை மூப்புள்ளவர்கள் புறந்தள்ளப்படடுள்ளனர். இதனை அப்போது இருந்த அதிகாரிகள் மறுக்க மாட்டார்கள் ஏன் எனில் முன்னைய ஆட்சியில் இருந்த உயிர்ப்பயம் தற்போது இல்லைத்தானே. எனவே இது தொடர்பாக ஆளுனருக்கு மூப்பு அடிப்படையில் ஒதுக்கப்பட்டோர் ஆளுனருக்கு பயமின்றி தலைமையூடாக மேன் முறையீடு செய்ய முன் வரவேண்டும்.
03).விவசாய அமைச்சால் பல லட்ச ரூபாய் செலவில் நடாத்திய 2 மாபெரும் விவசாயக் கண்காட்சியில் ஒன்றை ஏறாவூரிலும், மற்றையதை சாய்ந்தமருதிலும் நடாத்தியுள்ளார். இரண்டுமே முஸ்லிம்கள் வாழும் இடமாகும். அமைச்சின் பணம் ஒரு இனமக்களின் பணமில்லை நாட்டு மக்களின் பணம் என்பதை ஏன் உணரவி;ல்லை என்பது கவலைதான்.
04).கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் நவரட்ணராசா அவர்கள் தற்காலிகமாக வழங்கிய 4 சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க இம் முதலமைச்சருக்கு முன்புதான் ஈமான் இல்லாது போனாலும் தற்போதாவது வருமா என்பது கேள்விக்குறியே.
முஸ்லிம் காங்கிரஸ் இவரை முதலமைச்சராக நியமித்தது முன்பு கூறிய தகைமைதான் காரணமாகும்.
இவரது முதலமைச்சர் பதவியில் கிழக்கு வாழ் சைவ, இந்து, கிறிஸ்தவ தமிழ் மக்க்கள் 100 வீதம் பாதிப்படையாது பாதுகாப்பது த.தே.கூட்டமைப்பின் தலையாய கடமையாகும்.
முடியாத பட்சத்தில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களால், முஸ்லிம்களுக்கு ஏற்படும் வியாபார நன்மைகளை முடக்க பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ளல் வேண்டும் எனும் கருத்தை முன்வைப்பதை தவிர வேறு வழியில்லை.
அன்று த.தே.கூட்டமைப்பினர் முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசிற்கே என்று கூறியும் ஏமாற்றி விட்டு தற்போது எந்த முகம் கொண்டு த.தே.கூட்டமைப்பினை அழைக்கின்றார் எனத் தெரியவில்லை.
பட்டம், பதவிகளுக்காக சோரம் போக விடாது த.தே.கூட்டமைப்புத் தலைமையை பாதுகாப்பார் தந்தை செல்வா அவர்கள். ஒரு சில கூட்டமைப்பு உறுப்பினர்களின் மனம் ஊசலாடலாம். கிட்டத்தட்ட 28,000 ஆயிரம் போராளிகளில் அனேகமாக 90 வீதமானவர்கள் அர்ப்பணிப்பு செய்தவர்கள்.
கொலைகளை விரும்பாதவன் என்பதால் போராட்டம் சரி பிழையென வாதாட நான் வரவில்லை, யதார்த்தமான உணர்வுகளை முன்வைக்கின்றேன்.
இதுவரை த.தே.கூட்டமைப்பினர் பட்டம், பதவி, சொகுசு வாகனம், அமைச்சுக்கு விரும்பாது தாக்கு பிடித்துள்ளனர். இனிமேலும் தாக்குப்பிடிக்க உயிர்த்தியாக ஆத்மாவும் பலம் கொடுக்கும்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjt7.html
பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்போம்!- நிமால் சிறிபால டி சில்வா
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:33.48 AM GMT ]
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் பெப்ரவரி 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக நீடிக்கும் நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் அவர் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரையே பிரதமராக நியமிப்பார் என்று சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊவா மாகாணசபையில் முதலiமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஊழல்களில் தொடர்புடையவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும் நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை. எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjuy.html
நினைக்கும் அளவிற்கு பேய் கறுப்பு கிடையாது: ஜோன் அமரதுங்க
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:44.24 AM GMT ]
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ன நடக்கின்றது என? இவ்வாறான பல்வேறு சவால்களை ஏற்கனவே எனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்திருக்கின்றேன்.
விமர்சனங்களையும் கருத்துக்களையும் வெளியிட எதிர்க்கட்சியினருக்கு அவகாசம் உண்டு. அதில் எவ்வித தலையீடுகளையும் செய்யப் போவதில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடப் போவதில்லை என ஜோன் அமரதுங்க குறித்த சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் புதிய சட்டத்தின் அடிப்படையிலா நடைபெறும்? – தினேஸ் - தீர்மானிக்கவில்லை என்கிறார் கரு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:49.46 AM GMT ]
உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றின் ஆட்சிக் காலம் எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிறைவடைகின்றன.
எனவே இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் புதிய உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் அடிப்படையிலா நடைபெறும் என்பதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் புதிய சட்ட மூலமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பதவிக் காலம் முடிவடையும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடைபெறும் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை – கரு ஜயசூரிய
உள்ளூராட்சி மன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அரச நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்; காலம் ஆண்டின் ஆரம்பத்தில் நிறைவடைவதுடன், நாடாளுமன்றின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் பூர்த்தியாகவுள்ளது.
தேர்தல்களை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பழைய முறையிலா அல்லது புதிய சட்டத்தின் அடிப்படையிலா நடாத்துவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தும் தினம் பற்றி அறிவிக்கப்படும்.
234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் மார்ச் மாதம் 31ம் திகதியும், 65 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஜூலை மாதம் 31ம் திகதியும், 21 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒக்டோபர் மாதம் 31ம் திகதியும், 9 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் நாடாளுமன்றில் முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdju0.html
பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டிய அவசியமில்லை!- பிரதிபா மகாநாம ஹேவா
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 02:00.48 AM GMT ]
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கட்சியின் சிறிகொத்த காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டி வரும் எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்று காலை சிங்கள வானொலி சேவையொன்று கலாநிதி பிரதிபா மகாநாம ஹேவாவிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவது அரசாங்கத்திற்கு எதிராக அல்ல. ஒரு அமைச்சரின் செயற்பாடு தொடர்பில். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அமைச்சரை மாற்ற வேண்டுமே அல்லாமல் பாராளுமன்றத்தைக் கலைப்பதல்ல எனவும் கலாநிதி பிரதிபா மேலும் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் இருந்து அகதிகளை அழைத்துக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படவில்லை
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 02:29.05 AM GMT ]
பல காரணங்கள் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகள் முதலில் தமது விருப்பத்தின்பேரிலேயே இலங்கைக்கு வரவேண்டும்.
அடுத்ததாக அவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு முன்னர் இலங்கையில் இன்னும் குடியமர்த்தப்படாமல் உள்ள உள்ளூரில் இடம்பெயர்ந்த 26,056பேரை குடியமர்த்த வேண்டியுள்ளது.
இதற்கு அப்பால் முக்கியமாக இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின்போது அரசாங்கத்துக்கு எதிரான தேசியம் பேசும் கட்சிகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான கொள்கையுடைய கட்சிகள் என்பன இந்தியாவில் இருந்து அகதிகள் வருவார்களாக இருந்தால் அதனை தமது பிரசாரங்களுக்கு பயன்படுத்தக்கூடும்.
இந்த செயல் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு என்ற அடிப்படையில் அவை கூறக்கூடும்.
எனவே சிறிசேன- ரணில் அரசாங்கம் இந்த விடயத்தில் அவசரப்பட தேவையில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
தமிழக அரசாங்கத்தை பொறுத்தவரை இன்னும் இலங்கையில் முழுமையான அமைதி திரும்பவில்லை என்று கூறுகிறது.
எனினும் இந்திய மத்திய அரசாங்கம் தமிழர்களை திருப்பியனுப்புவதில் அவசரத்தை வெளிக்காட்டி வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdju2.html
Geen opmerkingen:
Een reactie posten