[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:13.02 PM GMT ]
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
கட்சியின் பேச்சாளராக இதுவரை காலமும் அமைச்சர் கயன்த கருணாதிலக்க பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கமிட்டிகளை நியமிக்கும் பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பலம் கட்சிக்குள் ஓங்கியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கில் ஆயுதக் குழுக்களுக்கு அடுத்தது என்ன? எல்லாம் தயார்..! சீ.யோகேஸ்வரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 11:58.49 PM GMT ]
கிழக்கில் பல்வேறு ஊழல்கள், இதில் ஈடுபட்ட சகலருக்கும் தண்டனை நிச்சயம், அதற்கான ஆதாரங்கள் விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjt4.html
ஆராய்கிறது தமிழ் கூட்டமைப்பு: இன்றும் முகாவுடன் சந்திப்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 12:02.22 AM GMT ]
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழுவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெறவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கட்சியில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருக்கும் அழைப்பைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் இந்த அழைப்பை விடுக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் தவறிழைத்துவிட்டது. இருந்த போதும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் அழைப்பை பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjt5.html
எமக்காக போராடியவர்களின் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 12:17.18 AM GMT ]
இதன் ஒரு பகுதியாக வருடாவருடம் திருவிழா போல் ஜெனிவாவில் அரங்கேற்றப்பட்டுவந்த ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை போர்களும் கிடப்பில் போடப்படும் கட்டத்தை நெருங்கிவிட்டதை தொடரும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.
அது மட்டுமல்ல எமது இதுவரை கால விடுதலைப் போராட்டத்தை இந்த ஐநா விசாரணை பொறிமுறையினூடாக புலிகளையும் குற்றவாளிகளாக்கி நீதியை மடைமாற்றி எமது இதுவரை கால போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய மேற்குலகம் முற்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே நடந்த இனஅழிப்பு மட்டுமல்ல தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பும் அனைத்து வழிகளிலும் திரைபோட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.
விளைவாக எமது கோரிக்கைகளும் போராட்ட நியாயங்களும் மிக வேகமாக செயலிழந்து வருகின்றன.
நாம் என்னதான் செய்யப்போகிறோம்.?
இந்த பத்தி எந்த தீர்வையும் சொல்ல வரவில்லை. மாறாக எமது இதுவரை கால போராட்டத்தை முதலில் மற்றவர்களுக்கு புரிய வைக்க முன்பு நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஐநா விசாரணை பொறிமுறை எவ்வளவு அவசியமோ அதேயளவு அதன் பின்னுள்ள அபாயத்தையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.
சிங்கள அரசின் குற்றங்களுக்கு நிகராக புலிகளின் குற்றங்களை ஆராயும் வாய்ப்புள்ளதையும் அதை தடுக்கும் வல்லமையோ அதற்கான பொறிமுறையோ அல்லாமல் எந்தவிதமான முன்நிபந்தனையுமின்றி இதன்பின் இழுபட்டதன் விளைவாக தற்போது நாம் ஒரு முட்டுச்சந்தியை நோக்கித தள்ளப்ட்டுள்ளோம்.
இது ஆட்சிமாற்றத்தின் பின்னான மேற்குலக - பிராந்திய சதிக்கும் இழுத்டிப்புக்கும் வசதியாக மாறியிருக்கிறது.
ஐநா விசாணைகளை துரிதப்படுத்தும் அதே நேரத்தில் "புலிகள் எந்த குற்றமுமிழைக்கவில்லை. புலிகளின் குற்றங்களாக வரையறுக்கப்பட்டவை அடிப்படையில் குற்றங்களேயல்ல." என்பதை நாம் புரிந்து கொள்வதும் ஐநா விசாரணைக்குழுவில் இதற்கான வாதங்களை முன்வைப்பதும்தான் எமது முதல் பணியாக இருக்க வேண்டும்.
போலி ஆவணங்களின், பொய்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் புலிகளும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால், எமக்கான நீதி தடம் புரண்டுவிடும்.
விளைவாக மேற்குலக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு ஆட்சிமாற்றத்துடன் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.
விளைவாக இனஅழிப்பு வேறொரு வடிவில் எம்மை அழிப்பது மட்டும் தொடர்கதையாக இருக்கும்.
இதை நாம் எப்படி முறியடிக்கப் போகிறோம்? இனியாவது நமது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்கான பொறிமுறையை உருவாக்கி புலிகளின் போராட்டத்தின் நியாயத்தை நிறுவுவார்களா?
குறைந்த பட்சம் இனஅழிப்பு அரசினதும் புலிகளினது குற்றங்களையும் சமப்படுத்தி ஆராயும் போக்கையாவது எம்மால் தடுத்து நிறுத்த முடியுமா? நாம் உடனயாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.
இந்த புரிதலுக்கு மற்றவர்களுக்கு புரிய வைக்க முன்பாக எமக்காக போராடியவர்களின் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
எங்கெல்லாம் நாம் போய் நடந்த இன அழிப்பை பேசுகிறோமோ அங்கு எம்மிடம் இறுதியாக கேட்கப்படும் கேள்விகள், “புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்யவில்லையா? மக்களை பணய கைதிகளாக வைத்திருக்கவில்லையா? தப்பியோடிய மக்களை புலிகள் சுடவில்லையா?” என்பவைதான்..
அது குற்றங்கள் அல்ல. அது ஒரு சூழலின் விளைவுகள். அதிலிருக்கும் தர்க்கங்கள் தெளிவற்றவை. ஒரு இன அழிப்பு நோக்குடன் ஆக்கிரமிக்கும் அந்நிய படையின் செயல்களையும் அந்த மக்களை காக்க அந்த அந்நிய படைகளை எதிர்த்து ஆயுதம் எந்திய பிரதிநிதிகளையும் சமப்படுத்தி ஆராய்வதே அடிப்படை தவறு.
எமது பின்னடைவு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடந்த நிகழ்வுகளை திரிப்பதற்கு வசதியாக மாறிவிட்டிருக்கிறது.
எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மத்தியில் சிறீலங்கா, இநதியா அமெரிக்கா உட்பட பெரும் இராணுவ – அரசியல் வலையமைப்புக்கு எதிராக போராட வேண்டியிருப்பதை உணர்ந்து யாரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்பதை கண்டறிந்து எதிரிகளை மக்களின் பலத்துடன் தமது மண்ணில் வைத்து அழித்தொழிப்பு செய்து ஒரு இராணுவ வெற்றியை அடைவதுதான் ஒரே தீர்வு என்பதை உணர்ந்து முன்பு கிளிநொச்சியையும் பின்பு ஆனந்தபுரத்தையும் ஒரு ஸ்ராலின்கிராட்டாக மாற்ற புலிகள் முயன்றார்கள்.
அதன் பின்புலம்தான் காலத்தின் தேவை கருதி கட்டாய ஆட்சேர்ப்புக்களாகவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய குறைவான பயிற்சிகளுடன் களமுனைக்கு ஆட்கள் அனுப்பப்பட்டதும் அதில் சில அசம்பாவிதங்களும் இதன் வழியேதான் நிறைவேறியது.
ஆனால் உள்ளிருந்து வேரறுத்த துரோகங்களும் சர்வதேச படைவலு கட்டமைப்புக்களின் இராணுவ- இராஜதந்திர- தொழில்நுட்ப உதவிகளும் சிறீலங்கா படுகொலை அரசிற்கு பெரும் பக்கபலமாக ஒன்றிணைந்து நின்று தமிழர் சேனையை எதிர்த்து போரிட்டன.. அந்த சின்னஞ்சிறிய படை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.?
விளைவாக “செய் அல்லது செத்துமடி” என்ற ஓர்மத்துடன் இறுதிவரை போராடி வீழ்ந்தார்கள் அந்த மண்ணில் புலிகள்..
ஆனால் மனித உரிமை, போர்க்குற்றம் தொடர்பான இடங்களில் இதை பேச முடியாது. அதற்கு வேறு மொழியும் வேறு வகையான தர்க்கங்களும் வைக்கப்பட வேண்டும். நாம் அதை வைப்போம் – பேசுவோம். நீதி கிடைக்கும் வரை பேசிக் கொண்டேயிருப்போம். ஏனென்றால் ஒரு மக்கள் விடுதலை அமைப்பையும் ஒரு இன அழிப்பு அரசையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிட முடியாது.
புலிகள் போராட்டத்தின் தேவையையும் நீதியையும் நிலைநிறுத்துவதுதன் மறுவளமான உண்மை என்பது அங்கு நடந்தது ஒரு இனஅழிப்பு என்பதாகவே இருக்கும். அதைவிடுத்து புலிகளின் குற்றங்களையும் இன அழிப்பு அரசின் குற்றங்களையும் சமப்படுத்தினால் அது எமக்கு பாரிய பின்னடைவை தரும். சில தமிழர்கள் இந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு புரிய வைக்க முன்பாக நாம் எமக்காக போராடியவர்களின் நியாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து முகநூலில் முன்பு Enemy at the Gates படத்தை முன்வைத்து ஒரு பதிவை எழுதியிருக்கிறேன்.
உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த வரலாறு Stalingrad நிலத்தில் வைத்து எழுதப்பட்டது நாம் அறிந்ததே.. இந்த பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. என்ன செய்வது சினிமாவை உதாரணமாகக் காட்டினால்தான் சிலருக்கு விளக்கமே கிடைக்கிறது.
ஆக்கிரமிப்பாளர்களை என்ன விலை கொடுத்தாவது துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் அழிவுக்கு மத்தியிலும் போராட முற்படும் ரஸ்யா தனது நாடு முழுவதிலிருந்தும் ஆட்களை வலுக்கட்டாயமாக போர் முனைக்கு கொண்டு வருவதும் எந்த பயிற்சியுமில்லாமல் போதிய ஆயுதங்கள் கூட இல்லாமல் அவர்களை கள முனையில் இறக்குவதும் மிகவும் தத்ருபமாக காட்சிப்படுத்தப்ட்டடுள்ளது.
மீறி தப்பி ஓடுபவர்களை ரஸ்ய வீரர்கள் “தாய்நாட்டை காக்காமல் ஓடும் நீ வாழத் தகுதியற்றவன்” என்று சுட்டுக்கொல்லும் காட்சிகளும் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படி சோர்க்கப்பட்ட ஒரு இளைஞன் காலத்தின் தேவை கருதி போர் முனையில் ஆக்கிரமிப்பாளர்களை துரத்தியடிக்க துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை விபரிப்பதே இத் திரைப்படத்தின் மையக்கதை.. வெற்றியின் பின்னால் இத்தகைய கதைகள் ஏராளமாக இருப்பதை உணர முடிகிறது.
வன்னி இறுதிப்போரிலும் புலிகள் குறித்து இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் “stalingrad” இல் ரஸ்ய வீரர்களின் செயற்பாட்டிற்கு ஒப்பானது. வெற்றி பெற்றதால் அது வரலாறாகியது. இங்கு தோற்றுப்போனதால் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இறுதிக்காலத்தில் புலிகள் மீது வைக்கப்படும் குற்றங்களின் உளவியல் இந்த பின்புலத்திலேயே ஆராயப்பட வேண்டும். நாம் ஏற்கனவே தெளிவாக இந்த உளவியலை ஆய்வு செய்திருக்கிறோம். அதை வரலாற்றில் பதிவாக்குவோம். எமக்காக போராடியவர்கள் மீதான குற்றங்களை களைய வேண்டியது நமது கடமை. நிச்சயம் அதைச் செய்வோம்.
இது புலிகளைப் புனிதப்படுத்துவதற்காக அல்ல – எமக்கான நீதியை பெற நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய தார்மீக கடமை இது.
பரணி கிருஸ்ணரஜனி
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjt6.html
Geen opmerkingen:
Een reactie posten