[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 04:40.37 AM GMT ]
பான் கீ மூனுக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை தாம் இலங்கைக்கு வருமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே குறித்த இருவரையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த மாத இறுதிக்குள் தென்னாபிரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்போது தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் பொறிமுறை இலங்கைக்கும் ஏற்புடையது என்று தெரியவந்தால், அதனை இலங்கையில் அமைக்கப்படவுள்ள உள்ளுர் விசாரணை பொறிமுறைக்கு சமாந்தரமாக கொண்டு செல்ல தயாராக உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவின் பொதுமன்னிப்பு கொள்கை ஏற்புடையதல்ல என்ற போதும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்லிணக்கம் மூலம் வடுக்களை ஆற்றுவதற்கு அதனை பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgt3.html
விசாரணைகளின் பின்னர் துமிந்த சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அஜித் ரோஹண
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 05:06.19 AM GMT ]
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர் வெலா சுதாவிடம் இருந்து பெருந்தொகை பணம் பெற்றுவந்தமை தொடர்பிலேயே துமிந்த சில்வாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இறுதியாக வெலே சுதாவிடம் இருந்து துமிந்த சில்வா 2.5 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளார். இதனை தவிர துமிந்த சில்வா பல்வேறு நிறுவனங்களுக்கும் சமய அமைப்புக்களுக்கும் நிதியுதவிகளை மேற்கொள்வதும், அதற்கான பணம் கிடைக்கும் வழிகள் என்பன தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன் துமிந்த சில்வா வசம் இருந்த 80 வங்கிகள் மற்றும் நிதிக்கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் அவர் கைதுசெய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பொலிஸ் பேச்சாளர் , வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே துமிந்த சில்வா கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் குற்றத்தடுப்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு முற்பகல் 9 மணிமுதல் , பிற்பகல் 3மணி வரை விசாரணை செய்யப்பட்டிருந்தார். இதன் பின்னர் புதன்கிழமை முற்பகல் 11 மணிமுதல் மாலை 5 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அவர் முற்பகல் 9 மணிக்கு வரவழைக்கப்பட்டு மாலை 5 மணிவரையும் விசாரணை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி: துமிந்த சில்வாவிடம் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணை
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgt4.html
அரசாங்கம் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிட்டால் சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றாது: ராஜித எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 05:18.37 AM GMT ]
ஆளும் கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிட்டால், சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியாமல் போகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அளுத்கமவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய ஆளும் கட்சிக்கும் அதன் 100 நாள் வேலைத்திட்டத்திற்கும் ஆதரவு வழங்கினால் அந்த கட்சி வலுவாகும் என்பதுடன் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை தற்காத்து கொள்ளும்.
புதிய ஜனநாயக முன்னணியில் பெரும்பான்மை பலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் உத்வேகத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி தனது பொதுத் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி வந்தவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து புதிய ஜனநாயக முன்னணியை ஏற்படுத்தியது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgt5.html
இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் வீதியில் இறங்க நேரிடும்: காணி அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 05:29.18 AM GMT ]
மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர்.
இந்த அநீதி அழுத்தங்கள் காரணமாகவே நான் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்ப்பை வெளியிட்டு வெளியே வந்தேன்.
இளைஞர்கள் அரச ஊழியர்கள் புத்திஜீவிகள் மூன்று வேளை உண்ண உணவில்லாதவர்கள் நாட்டில் கோரிய மாற்றத்திற்கு பங்களிப்பு வழங்கினோம்.
ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுகின்றேன். இன்று சிலர் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.
எனினும் அந்தக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இவர்களை ஐந்து சதத்திற்கேனும் மதிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்திய போது நாம் நாட்டுக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் ஆயுத பலத்தினால் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டது.
நாம் அந்த அனைத்து திட்டங்களையும் முறியடித்தோம் ஆயுத பலத்தை மக்கள் பலத்தினால் தோற்கடிக்கச் செய்தோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgt6.html
Geen opmerkingen:
Een reactie posten