தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

மோசமான ஊடக சுதந்திரம் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணி

பவித்ரா வன்னியாராச்சியின் அமைதிக்கு காரணம் என்ன?
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 05:40.11 AM GMT ]
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தான் மேற்கொண்ட சில சட்டவிரோத செயல்கள் சம்பந்தமான விடயங்கள் வெளியாகி விடும் என்ற காரணத்தினாலேயே முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தற்போது அமைதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இரத்தினபுரி பெல்மதுளை பிரதேசத்தில் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் பவித்ரா வன்னியாராச்சியின் குண்டர்கள் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் மின்வலு எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற பல முறைகேடுகளை மறைக்க வேண்டிய தேவையும் அவருக்கு இருப்பதாக பேசப்படுகிறது.
பவித்ரா வன்னியாராச்சி கையாண்ட பல விடயங்கள் குறித்து தற்போதைய ஜனாதிபதி நன்கு அறிந்து வைத்துள்ளார்.

ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 05:46.58 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு தசாப்த காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை நடத்தி நட்ட ஈடு வழங்கும் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அடுத்த வாரமளவில் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 1994ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான காரணத்தினால்  இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தகவல் திரட்டப்பட உள்ளது.
கட்சித் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட முறைப்பாட்டு மையத்திற்கு 30000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துன்புறுத்தல்களுக்கு இலக்கானமை, தொழில்களை இழந்தமை, சட்டவிரோத இடமாற்றம், சொத்து இழப்பு. தாக்குதலுக்கு இலக்கானமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஷிரந்தியின் வங்கி கணக்கு பற்றிய தகவல்களை வெளியிட்ட அதிகாரிகள் பின் தொடரப்படுகின்றனர்!
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 05:54.48 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவின் சிறிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் வங்கி கணக்கு பற்றிய தகவல்களை வெளியிட்ட வங்கி அதிகாரிகள் பின் தொடரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் பெயரில் இலங்கை வங்கியின் கிளையொன்றில் வங்கி கணக்கு ஒன்று நடைமுறையில் இருந்து வருவதுடன் அந்த கணக்கை ஆரம்பிக்க போலியான தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன.
இந்த நிலையில், அந்த தகவல்களை கசிய விட்டப்பட்டமை குறித்து வங்கி நிர்வாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
இப்படியான சட்டவிரோத செயல் சம்பந்தமாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ வேறு பொறுப்பு வாய்ந்த நிறுவனமோ அது பற்றிய விசாரணைகளை நடத்தாமல், தகவல் வெளியிட்டாளர்கள் என்று சந்தேகத்தின் பேரில் வங்கி அதிகாரிகளை பின் தொடர்வது பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgu0.html

கூடுதல் விலையில் விற்பனை செய்யும் தனியார் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:06.39 AM GMT ]
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறைக்கப்பட்ட 13 வகையான பொருட்களின் விலைகள் அனைத்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களிலும் நேற்று முதல்  குறைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நிர்ணய விலையை விட கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்யும் தனியார் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மோசமான ஊடக சுதந்திரம் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணி
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:08.42 AM GMT ]
உலகின் மோசமான ஊடக சுதந்திரத்தைக் கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலில் இலங்கை முன்னணி வகித்து வருகின்றது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் வெளியிடப்படும் வருடாந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சி காலத்தின் அடிப்படையில் இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திர தர வரிசையில் உலகின் 180 நாடுகளில் இலங்கை 165வது இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டில் 162வது  இடத்தை வகித்து வந்த இலங்கை தற்போது 165ம் நிலை வரை பின்தள்ளப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் ஊடக சுதந்திர நிலைமைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என எல்கலைக்களற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதி செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgu2.html

Geen opmerkingen:

Een reactie posten