[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 01:22.14 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.
எதிர்வரும் 18ம் திகதி நுகோகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டத்தொடர் முன்னெடுக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgs6.html
சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோத்தபாயவிற்கு ரவி கருணாநாயக்க சவால்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 02:05.36 AM GMT ]
2005ம் ஆண்டுக்கு பின்னர் கோத்தபாய திரட்டிய சொத்துக்கள் பற்றிய விபரங்களை முடிந்தால் சமர்ப்பிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன்.
என்னுடைய சொத்து விபரங்கள் பற்றிய விபரங்களை நான் வெளியிடுவேன்.
அதேபோன்று கோத்தபாயவும் தனது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.
நான் ஓர் கணக்காய்வாளர் 1983ம் ஆண்டில் காணியை கொள்வனவு செய்தேன். 1994ம் ஆண்டில் வீட்டை நிர்மாணித்தேன்.
1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானேன்.
1993ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதிக்கான சொத்து விபரங்களை வெளியிட நான் தயார்.
அந்த விபரங்களை ஊடகவியலாளர்கள் பார்வையிட முடியும். கையூட்டல் ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளேன்.
கோத்தபாய ராஜபக்சவினால் தனது சொத்து விபரங்களை இவ்வாறு வெளிப்படுத்த முடியுமா என நான் கேள்வி எழுப்புகி;ன்றேன்.
எங்கள் மீது சேறு பூச வேண்டாம் என கோத்தபாயவிடம் கேட்கின்றேன்.
அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய இலங்கை குடியுரிமை பெற்றுக்கொண்டு இதனைப் பற்றி ஏன் பேசவில்லை.
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்றவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு கோத்தபாயவிற்கு உண்டு.
உரிய விசாரணைகள் கூட இதுவைரயில் முறையாக நடைபெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உரிய விசாரணைகள் கூட இதுவைரயில் முறையாக நடைபெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போது அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgtz.html
போதைப் பொருள் கடத்தலை தடுக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 03:05.28 AM GMT ]
ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதனை தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
நீண்ட காலமாக மக்களையும் நாட்டையும் பிரச்சினையில் ஆழ்த்தி வரும் போதைப் பொருள் கடத்தல் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும்.
போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க கடந்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் சில காரணங்களினால் போதைப் பொருள் கடத்தல்களை தடுக்க முடியவில்லை.
எனினும் புதிய அரசாங்கம் கடுமையான அர்ப்பணிப்புடன் போதைப் பொருள் கடத்தல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளது.
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் சட்டங்களை கடுமையாக்குவதுடன் கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgt1.html
அரசாங்கம் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சுமந்திரன் எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 03:23.20 AM GMT ]
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஆயிரம் ஏக்கர் காணியினை விடுவிப்பதாகவும் அவற்றில் இருநூறு ஏக்கர் பரப்பில் மீள்குடியேற்றத்துக்கான மாதிரி கிராமத்தினை அமைத்து பொதுமக்களை குடியமர்த்துவதாகவும் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் இச்செயற்பாடானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே. வடக்கில் பொது மக்களின் வளங்களை உரிய மக்களுக்கே வழங்க வேண்டும் என்று நாம் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திடம் தெரிவித்தோம்.
இப்பகுதியில் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 23ஆயிரம் பேர் மொத்தமாக குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் அதற்கான காரணங்களையும் தெரிவித்தோம்.
இதற்கமைய இவ்விடயம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டில் அரசாங்கமே உயர் நீதிமன்றத்தில் அறிவித்தலொன்றினை கொடுத்திருந்தது.
மேலும் ஜனாதிபதியின் வாக்குறுதியும் இக்காணிகளை விடுவிப்பது என்றே இருந்தது. எமக்கு ஜனாதிபதி வாக்குறுதியளித்தமைக்கு அமைய தற்போது காணிகளை பொது மக்களிடம் கொடுக்க வேண்டும்.
தற்போது வடக்கில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதென அரசாங்கம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமே. ஆயினும் ஆயிரம் ஏக்கரில் அனைவரையும் குடியமர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
இவ்விடுவிக்கப்படவுள்ள காணிகளில் உரிய மக்களின் காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதேபோல் ஏனைய மக்களின் காணிகளையும் உடனடியாக அம்மக்களுக்கு வழங்க வேண்டும்.
அரசாங்கம் சகல மக்களுக்கும் சாதகமான வகையில் செயற்படுவதாக கூறியது. அதைக் கைவிட்டுவிட்டு ஆயிரம் ஏக்கரில் இச்செயற்பாட்டினை மேற்கொள்ள முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே அரசாங்கம் எமக்கும் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக செயற்படுத்த நாம் அரசுக்கு வலியுறுத்துகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgt2.html
Geen opmerkingen:
Een reactie posten