[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 04:57.34 AM GMT ]
தொடர்ந்தும் அவ் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் தான் அப்பதவியை விட்டு விலகிவிடுவதாக மேற்கு மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்பதை ஆராய சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலங்கந்தை ரொஸ்கி தோட்டப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு தயாரித்து அப்பிரதேச மக்களுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நேற்று மாலை ஹற்றன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நெருங்கிய உறவினர்கள் இருவருக்கு சொந்தமான மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் அனுமதிப் பத்திரத்தை மதுவரி திணைக்களம் இரத்துச் செய்துள்ளது.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்திக்க உள்ளார்.
பொகவந்தலாவ பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கொட்டியாகலை தோட்டப் பிரிவில் ஆற்றுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் ஒரு அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 74 படகுகளையும் விடுவிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மூவரில் இருவர் குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தவதாகவும் கடந்த மேற்கு மாகாண சபை தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்காக செயற்பட்டார்கள்.
எனினும் அவர்கள் தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் முதலமைச்சரை மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: மாகாண சபை மீது வெறுப்பு! பாராளுமன்றத்தின் மீது ஈர்ப்பு!– தயாசிறி ஜயசேகர
கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 05:06.25 AM GMT ]
சுற்றாடல் மற்றும் சுகாதார அவதானிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவிந்திர காரியவசம் இத்திட்டம் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தை கைவிடுமாறு கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அவதானிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவிந்திர காரியவசம் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து பொது மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் நாளை தொடக்கம் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhx2.html
நிவாரணங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்பதை ஆராய தீர்மானம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 05:31.29 AM GMT ]
இந்த ஆராய்வு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. வரவு செலவு நிவாரணம் மூலம் விலை குறைப்பு தொடர்பான மக்களுடைய நிலைப்பாடும் இதன்போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.
மேலும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு அவர்களது குடும்பத்தில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதேவேளை விவசாய மக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர்கள் இடைக்கால வரவு செலவு திட்ட நிவாரணத்தில் திருப்தி அடைகிறார்களா என்பதனை ஆராய சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கின்றது
கசிப்பு காய்ச்சிய ஒருவர் பொலிஸாரால் கைது- மீன்பிடி வலைகளுடன் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 05:47.30 AM GMT ]
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் இவ்வாறு சந்தேக நபரையும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் கைது செய்துள்ளனர்.
அத்தோடு இவர் நீண்ட காலமாக தனது மரக்கறி தோட்டப்பகுதியில் இரகசியமாக கசிப்பு தயாரித்து வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கசிப்பு காய்ச்சிய பயன்படுத்திய உபகரணங்களான ஒரு பெரல், மற்றும் இறப்பர் கேன்கள் என சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ஹற்றன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் ஹற்றன் பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
மீன்பிடி வலைகளுடன் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மூன்று இலட்சத்து இருப்பதி நாலாயிரம் (324,000.00) ரூபா பெறுமதியான ஆழ்கடலில் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனை தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மூன்று பேருக்கு 3240 அடி வலைகளை விற்பனை செய்துள்ளார். அவ்வலைகள் திருட்டு வலைகள் என்ற சந்தேகத்தில் வலையை விற்ற ஒருவரும், வாங்கிய மூவரும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வலைகள் ஒரு அடி நூறு ரூபாய் பெறுமதி என்றும் பிடிக்கப்பட்டுள்ள வலைகளில் 3240 அடி வலைகள் உள்ளதாகவும், வலைகளின் மொத்தப் பெறுமதி மூன்று இலட்சத்தி இருப்பதி நாலாயிரம் (324,000.00) என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வலைகள் வியாபாரத்துடன் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் புதன்கிழமை மாலை சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் வலைகளை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் இதற்கு முன்னரும் பல திருட்டுச் சம்பவங்களும் தொடர்புபட்டு குற்றத்தை அனுபவித்தவர் என்பது குறிப்பித்தக்கது.
முன்னாள் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தமான மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் அனுமதி இரத்து
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 06:08.14 AM GMT ]
தெமட்டகொடை பிரதேசத்தில் அண்மையில் 68 ஆயிரம் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வயம்ப மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பிரதான தொழிற்சாலையான குருணாகல் தொழிற்சாலை, யாழ்ப்பாணத்தில் உள்ள களஞ்சியம் என்பவற்றை மதுவரி திணைக்களம் சீல் வைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலையீட்டில் மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டதுடன் பல கோடி ரூபாவை குறித்த நிறுவனம் மதுவரி திணைக்களத்திற்கு செலுத்த தவறியுள்ளது.
மங்கள சமரவீர- ஜோன் கெரிக்கிடையில் இன்று சந்திப்பு!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 06:28.46 AM GMT ]
வொஷிங்டனில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுக்க உள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் மங்கள, ஜோன் கெரிக்கு விளக்க உள்ளார். அதேவேளை வெளிவிவகார அமைச்சர் நாளைய தினம் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திக்க உள்ளார்.
ஐ.நா இலங்கை தொடர்பாக மேற்கொண்டு வரும் சர்வதேச விசாரணை பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர அடுத்ததாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 28 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 06:46.07 AM GMT ]
பொகவந்தலாவ டின்சின் பகுதியிலுள்ள ஒரு மைதானமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மரக்கறி தோட்டமும் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது வெள்ள நீர் வடிந்தோடியுள்ளதாகவும் குடியிருப்புக்களுக்கும் மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனா்.
எனினும் இந்த குடியிருப்பில் உள்ள 12 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ.குமாரசிரியின் உத்தரவின்படி அம்பகமுவ பிரதேச சபையும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து இவா்களுக்கு உணவு உடமைகளை வழங்கி வருகின்றனா்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhx7.html
தமிழக மீனவர்களின் 74 படகுகளும் விடுவிப்பு! மன்னார் நீதிமன்றம் உத்தரவு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 07:03.13 AM GMT ]
மன்னார் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், விடுவிக்கப்பட்ட படகுகளை இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
நல்லெண்ண அடிப்படையில் இப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இலங்கை மீனவர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இடைவிடாமல் சிறை பிடிக்கப்பட்டு, அவ்வப்போது விடுவிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
இராமநாதபுரம்-45, புதுக்கோட்டை-27 (2 நாட்டுப்படகுகள் உட்பட), நாகை-8, பூம்புகார்-1, காரைக்கால்-4 என மொத்தம் 87 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனால், பல கோடி மதிப்புள்ள இந்த படகுகளை இழந்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல்,போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgoy.html
Geen opmerkingen:
Een reactie posten