தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

கேபி.யை கைது செய்யாதது ஏன் ? இதோ கசியும் சில தகவல்கள் !

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசத் தலைவர் கே.பி க்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கு 5ம் திகதி விசாரணைக்கு வந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான விஜித மலல்கொட மற்றும் எச்.எம்.நவாஸ் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதனின் கடவுச்சீட்டை பறிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரகசிய பொலிஸ் விசாரணையில் கேபி.யின் மாதாந்த சம்பள பட்டியலில் பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் , ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பெயரும் உள்ளடஙகுவதாக உறுதியாகியுள்ளது. கே.பி கைது செய்யப்பட்டால் இவர்கள் அனைவரது பெயர் பட்டியலும் வெளியாகும் என்ற அச்சத்தில் அவர் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு மீண்டும் பெப்ரவரி 18ம் திகதி விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடுத்த மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெரும உள்ளிட்ட குழவினர் வாதாடுகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/2234.html

Geen opmerkingen:

Een reactie posten