தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 februari 2015

பப்புவா நியுகினியில் துன்புறுத்தப்படும் இலங்கை அகதிகள்

ஐ.நா விசாரணை அறிக்கை காலதாமதமாக வெளியிடப்படுவதனை கண்டித்து கையெழுத்து போராட்டம்!
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 12:44.33 PM GMT ]
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற அநீதிகளுக்கு நியாகம் கோரும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆய்வு அறிக்கை காலதாமதமாக வெளியிடப்படுவதனை கண்டித்து யாழ். பல்கலைக்கழகத்தையடுத்து தமிழ் சிவில் சமூகத்தினரும் கையெழுத்துப் போராட்டத்தினை வடகிழக்கு மாகாணங்களில் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
எதிர்வரும் 24ம் திகதி யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மேற்படி அறிக்கை காலதாமதமாக்கப்பட்டமையினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றது.
இந்நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்று யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போதே தமிழ் சிவில் சமூக அமையம் மேற்படி கருத்தினை தெரிவித்திருக்கின்றது.
இன்றைய கூட்டத்தில் பலவேறுபட்ட சமூக அமைப்புக்கள், மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். என தெரிவித்திருக்கும் தமிழ் சிவில் சமூகத்தினர்,
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஆய்வு அறிக்கை முன்னதாகவே திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என கேட்டுள்ளதுடன், குறித்த அறிக்கையினை காலதாமதமாக வெளியிடுவதனைக் கண்டித்து. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் சிவில் சமூகத்தினர் கையெழுத்துப் பெறும் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மேலும் குறித்த ஐ.நா அறிக்கை கால தாமதப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்குப் பலர் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டியிருந்தாலும் அதன் மூலம் தமிழர்களின் நீதி மறுக்கப்பட்டுள்ளமையே
உண்மையாகும் என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதேவேளை குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவிக்கையில்,
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஒழுங்கமைத்திருந்த ஆர்ப்பாட்டம் முன்னதாக திட்டமிட்டபடி நடைபெறும்.
இதன்போது 24ம் திகதி காலை 9மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக சென்று யாழ்.நல்லூர் பகுதியில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்று அங்கே எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஐ.நா அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விருப்பத்திற்கிணங்க ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற சம்பாஷணைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கூறப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCSdSUnq0B.html



பப்புவா நியுகினியில் துன்புறுத்தப்படும் இலங்கை அகதிகள்
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 02:22.23 PM GMT ]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பப்புவா நியுகினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பிபிசி செய்து  வெளியிட்டுள்ளது.

குறித்த முகாமில் தொண்டு ஊழியராக பணியாற்றிய ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த முகாமில் இலங்கை, ஈரான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கபட்டுள்ள நிலையில், அவர்களை அங்குள்ள அதிகாரிகளால் நாளாந்தம் நிந்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இனரீதியாக தூசித்தல், துன்புறுத்தப்படுத்தல், முறையாக பேணப்படாமை போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு அகதிகள் உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முகாம்களில் முறையான சுகாதார வசதிகள் இல்லாமையால், பல நோய்களால் அகதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSdSUnq0F.html


Geen opmerkingen:

Een reactie posten