இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் சீனா கருத்து வெளியிட்டுள்ளது. மைத்திரிபாலவின் இந்திய விஜயத்தை பார்ப்பதற்கு தமக்கு சந்தோசமாக உள்ளதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் மத்தியில் நட்புரிமையும் நல்லுறவும் நிலவுகிறது.
இந்தியாவும் இலங்கையும் சீனாவை பொறுத்தவரை முக்கியமான நாடுகளாகும்.
இந்தநிலையில் இந்தியாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் அதேநேரம், இலங்கையுடனும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக சீன பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் அணு உடன்படிக்கை உட்பட்ட பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டநிலையிலேயே சீனாவின் கருத்து வெளியாகியுள்ளது.
மன்மோகன், சோனியாவையும் சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி
இந்தியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno6J.html
Geen opmerkingen:
Een reactie posten