[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 08:20.57 AM GMT ]
மிருசுவில் சேமக்காலையில் இறந்த உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை உறவினர்கள் கல்லறையினை தோண்டிய போது கைக்குண்டுகள் பல மறைவாக புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக மிருசுவில் பங்குத்தந்தையால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இன்று காலை ஆயுத பொறியியல் பிரிவினரால் கல்லறைக்குள் 18 கைக்குண்டுகள் நல்ல நிலையில் இருந்து அவை பாதுகாப்பா மீட்கப்பட்டு அகற்றப்பட்டது.
அதன் பின்பு இறந்த உடலம் இன்று அக்கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்படி சேமக்காலையினை சூழ போர்க்காலப்பகுதியில் படையினரின் பாரிய எறிகணை தளங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா விசாரணை ஒத்திவைப்பு! இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி: பிரதி வெளிவிவகார அமைச்சர்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 08:24.00 AM GMT ]
ஐ. நா விசாரணை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தமை இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டுள்ளர்.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.நாவின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ள வெளிவிவகாரப் பிரதி அமைச்சர், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பாரிய பிரதிகூலங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எண்ணம். ஐ.நாவினால் வழங்கப்பட்டுள்ள 6 மாதகாலத்திற்குள் இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை எவ்வாறு சமாளிப்பது மற்றும் அது குறித்த விசாரணைகளை உள்ளக முறையில் முன்னெடுப்பது குறித்து நடவடிக்கை எடுப்போம் என பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
உள்ளக விசாரணையின்போது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணையோ அல்லது எவ்வித விசாரணையோ வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno3H.html
விசாரணை அறிக்கை தாமதமானால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப இடமளிக்கும்: மன்னிப்புச் சபை
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 07:22.48 AM GMT ]
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது.
எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹுசைன் அறிக்கை தாக்கலை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார்.
இந்நிலையில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் இந்த முடிவு இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க இடமளிக்க ஏதுவதாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலய பணிப்பாளர் ரிச்சாட் பெனாட் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் அறிவிப்பு அறிக்கையை மேலும் வலுப்படுத்தி உறுதியான ஆவணத்தை தயாரிக்க வழியேற்படுத்தும் என்றும் இலங்கை அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமதம் நியாயமானதெனவும் மோதல் சகாப்த முறைகேடுகளை விசாரிக்க மற்றும் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவர ஐ.நா - இலங்கை இணைந்து செயல்பட உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாட்சியளித்தவர்களுக்கு நீதி வழங்க மனித உரிமை கவுன்ஸில் விழித்திருக்க வேண்டும் எனவும் சாட்சியாளர்கள் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno3C.html
Geen opmerkingen:
Een reactie posten