[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 06:57.01 AM GMT ]
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவிடயங்களையும் கலந்துரையாடல் மூலமே பேசித் தீர்க்க முடியும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் உள்ளன. எனினும் இடம்பெற்ற அபிவிருத்திகளை குறைவாகவோ அல்லது நிறைவாகவோ எண்ணக்கூடாது. எமக்கு இருக்கின்ற பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக பேசுவதனூடாக வெற்றிபெற முடியும்.
அரசு எண்ணுவது போலவே சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வை எட்ட முடியும் என்றே நானும் நம்புகின்றேன். கலந்துரையாடல்கள் இன்றி பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
வடக்கு மாகாணத்தில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
அத்துடன் நானும் ஒரு அரச ஊழியன் தான். மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெற்று வருகின்றோம். எனவே அந்த மக்களுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் நாம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வடக்கு முதலமைச்சர் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அவற்றைச் செய்வதற்கு நானும் ஒத்துழைப்பு வழங்குகின்றேன் என அவர் தெரிவித்தார்.
ஒற்றுமையை வலுப்படுத்த விக்கியை சந்திக்கும் கிழக்கு முதல்வர்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 07:15.54 AM GMT ]
வடமாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் விரைவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பெற்றுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட் நேற்றைய ஊடக சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகால உறவு காணப்படுகின்றது. அதனை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக காணப்படுகின்றனர்.
இரண்டு சமூகத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை தொடர்பில் ஒற்றுமைப்பாட்டுடன் தீர்வைப் பெற்றுக்கொள்வதே அவசியமானது.
ஆகவே அவை தொடர்பாகவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வடக்கு முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்றார்.
நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 07:22.27 AM GMT ]
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் கிளிவெட்டி நலன்புரி முகாமிற்கு முன்பாக நேற்று இடம்பெற்றுள்ளது.
யுத்தம் நிலவிய போது 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து கிளிவெட்டி, மணற்சேனை, பட்டித்திடல், கட்டைபறிச்சான் உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் இம்மக்கள் தங்கியுள்ளனர்.
இதுவரையிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மூதூர் கிழக்கு சம்பூர் மக்கள் தங்களை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியமர்த்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன் தமது நிலத்தை தம்மிடமிருந்து பறிக்க காரணமாகவிருந்த அனல்மின்சார நிலைய வேலைகளை தடை செய்யுமாறும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசே தங்களை சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்று, எங்களுக்கு சொந்த மண் வேண்டும், சம்பூர் அணல் மின்சார நிலைய வேலைகளை ஆரம்பிக்காதே, காணாமல் போன எங்கள் பிள்ளைகள் எங்கே, போன்ற பதாதைகளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.
தமது நிலத்தை விட்டு வாழ முடியாது எனத் தெரிவித்த மக்கள் தம்மை இனியும் இவ்வாறு துன்புறுத்தாமல் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
எங்களது நிலத்தை தராவிட்டால் ஒரு குப்பி நஞ்சு தாருங்கள் என கண்ணீர் விட்டு கதறியபடி சம்பூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாம்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகளின்றி பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno3B.html
Geen opmerkingen:
Een reactie posten