தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

நாமல் ராஜபக்சவின் கலாநிதி பட்டப் படிப்பு குறித்தும் விசாரணை/கிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்

கிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 03:14.15 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் மாகாண சபையின் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்தெந்த அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் குழுத்தலைவர் எஸ் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தலைவர் சம்பந்தனால் அமைக்கப்பட்ட ஐவரைக் கொண்ட குழு, கொழும்பில் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த இணக்கத்துக்கு வந்துள்ளதாக தண்டாயுதபாணி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மூன்றாவது கூட்டம் பெரும்பாலும் திருகோணமலையில் அதில் அமைச்சுக்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியை கொண்டு முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஒற்றுமையுடன் இணங்கிச் செல்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தண்டாயுதபாணி கூறினார்.
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno1B.html

நுகேகொடை கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை: மஹிந்த
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 06:41.37 AM GMT ]
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் நாளை பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
அந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தனக்கு நெருக்கமான சிலரிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் தனக்கில்லை எனவும் தனது புதல்வரான நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno2H.html
இந்தியா இலங்கை கடற் பாதை திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 08:58.47 AM GMT ]
இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக அமைந்துள்ள கடல் வழியாக அமைக்கப்பட உள்ள கடற்பாதை திட்டத்தை விரைவுபடுத்துமாறு தமிழக வர்ததக சமூகம்  இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தமிழக வர்த்தக குழு உறுப்பினர்கள் சிலர் இந்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நேற்று புதுடில்லியில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தின் ஊடாக இலங்கையின் வடக்கு கடலுக்கு சுற்றாடல் பிரச்சினை ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக மாற்றுக் கடற்பாதைத் திட்டத்தை இந்தியாவின் புதிய அரசாங்கம் முன்வைத்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno4B.html

நாமல் ராஜபக்சவின் கலாநிதி பட்டப் படிப்பு குறித்தும் விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 10:21.38 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டு வரும் குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி பட்டப் படிப்புக்கான அனுமதி பெறப்பட்ட  விதம் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விசாரணை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் கலாநிதி பட்டப்படிப்புக்கான பதிவு செய்தலின் போது பாரதூரமான தவறுகள் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்ச, கலாநிதி பட்டப்படிப்புக்கு முன்னரான ஆய்வு பட்டத்தை முழுமைப்படுத்தாமலேயே கலாநிதி பட்டத்தை பெற பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளதுடன் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச, கலாநிதி பட்டத்தை பெற விண்ணப்பித்த நேரத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்லைக்கழகத்தின் உபவேந்தராக என்.ஏ.எல். கருணாரத்ன பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno4H.html

Geen opmerkingen:

Een reactie posten