[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:33.51 AM GMT ]
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளை வழங்க மறுக்கும் வியாபாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர், நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத நிறுவனங்கள் குறித்து 1977 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிக விலையில் பொருட்கள் விற்பனை தொடர்பில் 1500 முறைப்பாடுகள்!
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக பொருட்கள் விற்கப்பட்டமை குறித்து ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்கப்படுகின்றமை குறித்தே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வட, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள உணவகங்களில் தேநீர்,அப்பம் என்பன அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிய அரசின் வரவு செலவுத்திட்ட சலுகைகளை உரிய முறையில் நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதிலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjwy.html
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது: பாதுகாப்புச் செயலாளர்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:45.07 AM GMT ]
கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளிடம் ஆசி பெற்றுக்கொள்வதற்காக நேற்று சென்றிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரச்சினைகள் காணப்படும் சில வங்கி கணக்கு விபரங்கள் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய திறைசேரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சொற்ப அளவிலானவர்களே இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும். வடக்கின் இராணுவ முகாம்கள் எந்த காரணத்திற்காகவும் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது.
அந்தப் பிரதேசங்களின் பாதுகாப்பு மேலும் மேலும் பலப்படுத்தப்படும். பெரும் எண்ணிக்கையிலான இராணுவ முகாம்கள் அரசாங்க காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்கள் சிவிலியன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாண மீனவர்கள் அதிருப்தி
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:47.01 AM GMT ]
கடந்த காலங்களில் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதால் அதனை தடுத்து நிறுத்த கடற்படையினர் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும் அண்மைக் காலமாக இந்திய மீனவர்கள் கனிசமான அளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதில்லை என யாழ்ப்பாண மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் ட்ரோலர் ரக மீன்பிடிப் படகுகளினால் தமது மீன்பிடி வலைகள் சேதமடைவதாகத் தெரிவித்துள்ளனர். அண்மைய நாட்களில் சுமார் 75000 முதல் 100, 000 வரையில் தமக்கு வலைகள் சேதமடைந்ததனால் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு இந்திய மீனவர்கள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து எவ்வித முறைப்பாடுகளும் மீனவர்கள் தரப்பிலிருந்து கிடைக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய இலங்கை தலைவர்கள் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்ள உள்ள காரணத்தினால் இவ்வாறு கடற்படையினர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டு கொள்வதில்லையா என யாழ்ப்பாண மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjw0.html
Geen opmerkingen:
Een reactie posten