[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:47.11 AM GMT ]
இணைய மோசடிகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப சிரேஸ்ட பொறியியலாளர் ரோஹான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
போலியான முக நூல் கணக்குகளே அதிகளவான மோசடிகளுக்கான காரணமாக அமைந்துள்ளது. மிரட்டல்கள் பண மோசடி ஏமாற்றல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயற்பாடுகளின் போது பயனர்கள் மிகுந்த கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது.
குறிப்பாக தங்களது அடையாளத்தை மிகச் சரியான முறையில் உறுதி செய்யக் கூடிய அதாவது போலி கணக்குகள் உருவாக்கப்பட முடியாத வகையில் கணக்குகளை ஆரம்பிக்க வேண்டுமென சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
மாளிகை வரி 2000ம் ஆண்டிற்கு பின்னரான வீடுகளுக்கு மட்டுமே: நிதி அமைச்சர்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:59.13 AM GMT ]
மாளிகை வரிக்கு அமைய, காணியின் அளவு மதிப்பீடு செய்யப்படமாட்டாது எனவும், 10000 சதுர அடிக்கு மேலதிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கே வரி அறிவீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையில் புதிய அரசில் நம்பிக்கை இல்லை: பிரட் அடம்ஸ்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 06:08.42 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து புதிய அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் என்று தமக்கு நம்பிக்கையில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினருக்கு தலைமை தாங்கிய முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகா அரசுடன் இணைந்துள்ளமையினால் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அரசியல் மயப்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளமையினால் யுத்த குற்ற விசாரணைகள் உள்நாட்டு அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளலாம் என எனவும், தற்போதைய நடைமுறையின் மையமாக ஐ.நா சபையே செயற்பட வேண்டும் எனவும், இது குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjw3.html
Geen opmerkingen:
Een reactie posten