தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு இரவு 10 மணி வரை- அரச பாடசாலையில் பகலுணவு வழங்க திட்டம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 04:59.44 AM GMT ]
இந்நடவடிக்கை எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என வைத்தியசாலையின் நிர்வாக வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை தேசிய வைத்தியசாலையில் இரவு 8 மணி வரை வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளையடுத்தே இப்புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடு பூராகவுமுள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளில் 24 மணி நேர சேவையை வழங்குமாறு புதிய அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிதி அமைச்சர் யோசனையொன்றை முன்வைத்தார்.
தரம் 1-5 வரையான அரச பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்க திட்டம்
அரசாங்க பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 1-5 வரையிலான மாணவர்களுக்கு பகலுணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இத்திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கம் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கே இத்திட்டத்தை அமுல்படுத்தியதினால் மாணவர்களுக்கிடையில் பாகுப்பாடு காணப்பட்டது.
இந்நிலைமையை நீக்குவதற்காகவே சகல மாணவர்களுக்கும் பகலுணவை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வீ.இராதகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjv4.html
இலங்கையின் பல வகை அரிசிகளில் ஆசனிக் நச்சு: எச்சரிக்கும் வெளிநாட்டு ஊடகம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:02.58 AM GMT ]
குறித்த பிரச்சினை தொடர்பாக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னரே வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்த போது ஊடக சந்திப்பின் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும் விவசாய துறையில் நிபுணத்துவம் சார் அதிகாரிகள், விவசாய அமைச்சு மற்றும் முன்னாள் விவசாய அமைச்சர்கள் இவை பொய்யான தகவலெனவும் மற்றும் கோதுமை மா சூழ்ச்சி என கூறி அரிசியின் நச்சு தன்மை தொடர்பான ஆராய்ச்சியை நிராகரித்துள்ளனர்.
தேசிய பாரம்பரிய நெல்லில் ஆசனிக் அளவு மிக குறைவாகவே காணப்பட்டது. அதற்கான காரணம் பாரம்பரிய நெற் பயிர்ச்செய்கையின் போது இரசாயண கலப்படமற்றமையே என குறித்த பத்திரிகை முக்கிய காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஆயினும் பாரம்பரிய நெல் வகைகளுக்கும் இரசாயண பொருட்கள் உபயோகப்பட்டிருப்பதால் பாரம்பரிய நெல் வகைகளுக்கும் குறித்த ஆசனிக் நச்சு பொருள் கலக்கப்பட்டிருப்பதோடு பார உலோகங்களும் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசியில் உள்ள ஆசனிக் நச்சு பொருளினால் புற்றுநோய் மற்றும் வேறு பல நோய்களில் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக ஸ்கொட்லாந்து அறிஞர்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjv5.html
மஹிந்தவிற்கு ஆதரவளித்தவர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய ஐ.தே.க தீர்மானம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:03.03 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சகல மக்கள் பிரதிநிதிகளினதும் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் செயற்குழுவினால் நேற்று இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கட்சி எடுத்தத் தீர்மானத்தை மதிக்காது ஒரு சில ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்திருந்தனர்.
இவ்வாறு ஆதரவளித்த மக்கள் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இன்னும் 10 நாட்களுக்குள் வலி வடக்கில் 3000 ஏக்கர் நிலத்தை இராணுவம் கையளிக்கும்: சுவாமிநாதன்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 05:06.37 AM GMT ]
தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை இந்த அரசின் நூறு நாள் திட்டத்தில் வலி- வடக்கில் எந்தப்பகுதி முதலில் விடுவிக்கப்படும் என்பது தொடர்பாக இராணுவம் 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்கவிருப்பதாகவும் அதன் பின் காணிகள் விடுவிக்கப்படும் என்று மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjv7.html
Geen opmerkingen:
Een reactie posten