தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வளைத்துப்போட தற்போதைய அரசு திட்டமா ?

கிழக்கில் சிங்கள ராணுவச் சிப்பாய் சுட்டுக் கொலை: எப்படி நடந்தது என்று தெரியவில்லை !

[ Feb 07, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 15880 ]
காத்தான்குடி, 5ஆம் குறிச்சி பகுதியில் நேற்று(06) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. சம்பவத்தில், மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருநாரத்ன என்ற இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. 5ஆம் குறிச்சி பகுதியில் கடமையிலிருந்த மேற்படி இராணுவ சிப்பாட், கடமையை முடித்துக்கொண்டு கோவில்குளம் இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்செயலாக இச் சம்பவம் இடம்பெற்றதா ? இல்லை முகாம் நோக்கி சென்றுகொண்டு இருந்த ராணுவச் சிப்பாய்களுக்கு இடையே நடைபெற்ற மோததால் இவர் இறந்தாரா என்று தெரியவில்லை என்கிறார்கள் பொலிசார். துப்பாக்கி தானாக வெடித்ததில் இந்த சிப்பாய் இறந்ததாக ஒரு சகபாடி கூறியுள்ளபோதும், பொலிசார் இதனை விட்டபாடாக இல்லை. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அவர்கள் நடத்தி வருகிறார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/2209.html

ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வளைத்துப்போட தற்போதைய அரசு திட்டமா ?

[ Feb 08, 2015 02:54:30 PM | வாசித்தோர் : 3095 ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் இளவரசரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். விட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை அலுவலகத்தின் ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2214.html

Geen opmerkingen:

Een reactie posten