[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 11:40.19 PM GMT ]
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய குழுவினர் மேற்கொண்டதாக கூறப்படும் சதி முயற்சிக்கான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கை வெளியானவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னகர்த்தப்படும் என தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfxy.html
எந்தையும் தாயும் அவர் முந்தையரும் வாழ்ந்த மண்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 12:40.35 AM GMT ]
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒருபோதும் நேரடியாக முரண்பட்டது கிடையாது. மிக அன்னியோன்யமான உறவு இருதரப்பிடமும் இருந்துள்ளது.
ஆயினும் இந்த நாட்டை ஆண்ட சிங்களப் பேரினவாதிகள் தங்களின் ஆட்சி நிலைப்பிற்காக தமிழர்களை விரோதிகளாகக் காட்டிக் கொண்டனர். அதனை நீங்களும் நம்பினீர்கள். போதாக்குறைக்கு தென்னிலங்கை ஊடகங்கள் இனவாதத்தை ஊதிப் பெருக்க வைத்தன.
அரசியல்வாதிகளின் பதவி ஆசையும் ஊடகங்களின் உழைப்பும் இனவாதத்தை வளர்ப்பதன் ஊடாக அடையப்பட்டன.
இதனால் காலத்துக்குக் காலம் இனக் கலவரங் களை ஏற்படுத்தி தமிழ்-சிங்கள உறவு பிரித்தாளப்பட்டது. இத்தகையதோர் சூழ்நிலையில்தான் சிங்கள வர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று தமிழ் இனம் முடிவு செய்தது.
அந்த முடிவில் தமிழ் இளைஞர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். வெறி கொண்ட பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களை எப்படியும் கொன்றொழிக்கலாம் என்று தீர்மானித்தனர்.
அதன் விளைவு இலட்சக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் உயிரிழந்து போயினர். இதனிடையே இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையும் தமிழ் இனத்தைச் சங்காரம் செய்து தாயகம் திரும்பியது.
ஆக, இலங்கைத் தமிழ் மக்கள் இத்துணை பேரழிவுகளைச் சந்திப்பதற்கு அவர்கள் செய்த குற்றம் தான் என்ன? தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்தழிவுகள் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்திருப்பீர்களா? என்பது நமக்கு தெரியாதாயினும் உங்களிலும் சிலர் எங்களின் அவலம் பற்றி சிந்தித்தனர் என்ற உண்மையையும் இவ்விடத்தில் சொல்லித்தானாக வேண்டும்.
எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை உங்களில் பலர் அறியாமலும் இருந்திருக்கலாம். அல்லது எங்கள் இழப்புகள் பற்றி உங்களுக்கு வேறுவிதமான காட்சிகள் காட்டப்பட்டிருக்கலாம். என்ன செய்வது! உலகமயமாதல் என்பதற்குள் தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் இருள் மயத்திற்குள் அமிழ்ந்து போக, தற்போது சம்பந்தர், மைத்திரி என்று சொல்ல, நாங்கள் புள்ளடி போட்டு விட்டு இருக்கிறோம்.
அட, எங்களின் புள்ளடிக்கு நாங்கள் வாழ்ந்திருந்த ஆயிரம் ஏக்கர் காணியை மீளத்தருவதாக மைத்திரி ஐயா கூறியிருப்பதாக அறிகிறோம்.
வந்த மனுசன் ஆயிரம் ஏக்கர்களைத் தந்தார் என்று நிம்மதி அடையலாம் என்றால், அந்த ஆயிரம் ஏக்கரும் ஏற்கனவே மகிந்தர் விடுவதற்குச் சம்மதித்த இடமாம். ஓகோ! ஜனாதிபதி மைத்திரியும் எங்களை ஏமாற்றுகிறாரோ தெரியவில்லை.
என்ன செய்வது! நம்பி ஏமாந்த தமிழினம் என்பதால், நாடு கேட்ட எங்களுக்கு எந்தையும் தாயும் அவர் முந்தையரும் வாழ்ந்த நிலத்தை தந்துவிட, அரசியல் தலைமை கூற, அதை நாங்கள் நம்பி காலன் வரும் வரை எங்கள் காலம் போகிறது.
அன்புக்குரிய சிங்கள மக்களே! இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவித்தது தொடர்பில் மகிந்த ராஜபக்ச நிச்சயம் மாற்றுப் பிரசாரம் செய்வார். தன்னைப் பிரதமராக்கினால் ஆயிரத்தோடு ஐயாயிரம் சேர்த்து தமிழர்களின் ஆறாயிரம் ஏக்கர் நிலத்தை இன்னும் பிடிப்பேன் என்று மகிந்த கூறுவார். இது நடக்கும் சத்தியம் என்று விமல் வீரவன்ச முறுகுவார்.
தயவு செய்து இதை நம்பி விடாதீர்கள். சிங்களப் படை குண்டு எறிந்த போது நாங்கள் விட்டு வந்த எங்கள் வீட்டு நிலத்தை திரும்பப் பெறுவதையும் புரட்டிப் பிரசாரம் செய்வோர் மீது காறி உமிழ்ந்து விடுங்கள். அப்போது தான் தமிழ்-சிங்கள உறவு தழைக்கும்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdfx0.html
மனுஸ் தீவு அகதிகள் தொடர்பில் உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு!!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 12:49.43 AM GMT ]
அகதிகள் செயற்பாட்டாளர்களின் சர்வதேசக் குழு, மனுஸ் தீவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் பிரதம மந்திரி டோனி அபொட் கட்டாயத் தடுப்புக் காவலில் அகதிகளை அடைத்து வைத்துள்ளதை கணடித்து உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக இயன் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இந்த அகதிக் கொள்கைகள் காரணமாக அவுஸ்திரேலியர்கள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.
மனித உரிமை அமைப்புகளும் தற்போது அபொட் அரசுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறுவர்கள் பெண்கள் மிகவும் நீண்ட நாள் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகவும், அகதிகள் சட்டத்தை அவுஸ்திரேலியா மீறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனாலும் எந்தச் சவாலுக்கும் பயப்படப் போவதில்லை, தங்களது கொள்கையில் மாற்றம் கொண்டுவரப் போவதில்லை என்ற முடிவில் டோனி அரசாங்கம் உள்ளது.
அகதி செயற்பாட்டாளர்கள் எந்த நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு தான் அடிபணியப் போவதில்லை என்ற மனநிலையிலேயே தற்போதைய அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdfx1.html
Geen opmerkingen:
Een reactie posten