தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

ஒரு மில்லியன் டாலர் நோட்டு, யாழில் நடக்கும் வினோதமான ஏமாற்று !


யாழில் பல ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருகிறது. அது மகிந்த ராஜபக்ஷ காலத்தில் , உச்சத்தை எட்டியிருந்தது. தற்போது அது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இனம் தெரியாத சிலர், யாழில் ஒரு மில்லியன் அமெரிக்க நோட்டு (தாழ்) ஒன்றை விற்பனை செய்து வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அரசு இதுபோன்ற ஒரு நோட்டை இதுவரை அச்சடித்ததே இல்லை. மேலும் 100 டாலர் அமெரிக்க நோட்டை பார்பதே கடினமான விடையமாக இருக்கும்போது 1 மில்லியன் அமெரிக்க டாலர் நோட்டாக உள்ளது என்று கூறி அதனை சிலர் விற்று வருவதாக கூறப்படுகிறது.
1 மில்லியன் அமெரிக்க டாலர் என்றால் இலங்கைப் பெறுமதியில் அது 132 கோடி ரூபா வரும். அவ்வளவு பெறுமதியான நோட்டை நீங்கள் குறைந்த விலை கொடுத்து வாங்கி வைத்துக்கொண்டால் , இன்னும் சில காலம் கழித்து அதனை நல்ல விலைக்கு விற்கலாம் என்று இதனை விற்பவர்கள் ஆசை வார்த்தை காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. போதாக்குறைக்கு இந்த நோட்டுக்கு சார்டிபிக்கட் வேறு இருப்பதாக கூறுகிறார்கள். எது எவ்வாறு இருப்பினும் இது போன்ற மோசடியில் யாழ் தமிழர்கள் சிக்கவேண்டாம் என்றும் , விழிப்போடு இருக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Geen opmerkingen:

Een reactie posten