[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 01:16.15 PM GMT ]
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை தேர்தலின் பின்னரான வன்முறைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளைபிரேரணை மீதான விவாவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இங்கு மேலும் கூறுகையில்;
புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மனித உரிமைகள் குறித்து பேசுவது போன்றும் படுகொலைகள் பற்றி ஹிட்லர் குரல் கொடுப்பது போன்றுமே இன்று தேர்தலின் பின்னரான வன்முறைகள் தொடர்பில் பிரேரணை கொண்டு வந்து இங்கு பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய பிரேரணையைக் கொண்டு வந்து சமர்ப்பித்து உரையாற்றுபவர்களின் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடந்தவை பற்றி நாடே அறிந்துள்ளது.
எதிர்க்கட்சி வரிசைகளில் அமர்ந்திருக்கின்றவர்களில் பலர் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான சட்டம் சரியாக செயற்படும். முதலில் கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு பின்னர் சிறைகளுக்கே அனுப்பி வைக்கப்படுவர்.
அத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கப்போவதாக இங்கு சிலர் கூறித் திரிகின்றனர். நிச்சயமாக அவர்கள் வெலிக்கடையிலும் போகம்பறையிலும் ஆட்சியமைக்கத்தான் போகின்றனர்.
எனவே மைத்திரி நிர்வாத்துடன் விளையாடிக்கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேல்தல் நடைபெற்ற மறுதினத்தில் 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்க வேண்டும். ஆனாலும் அது இடம்பெறவில்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இது தடுக்கப்பட்டது.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட படுகொலைகள் இடம்பெற்றிருக்கும். எப்படி இருப்பினும் பொலிஸ் மா அதிபர், இராணுவத்தளபதி மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்டோரின் நேர்மையான செயற்பாடுகளால் எல்லா அனர்த்தங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdix1.html
அரசாங்கத்திற்கு சேறு பூசுவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம்!- ரவி கருணாநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 02:19.45 PM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக, திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நாட்டில் தற்போது புலி இல்லை. தற்போது புலிகள் மிருகக் காட்சிசாலையில் மட்டுமே இருக்கின்றன.
எதிர்க்கட்சிகளுக்கு எங்கும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீது சேறு பூசல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது நாட்டில் தேசிய அரசாங்கம் ஆட்சி நடத்தி வருகின்றது, எங்களுக்கு பதவிகள் கிடைத்துள்ளன எனினும் அவை நிரந்தரமானவை கிடையாது.
எங்களுக்கு எவ்விதமான பதவி கிடைத்தாலும் மக்களுக்கு நாம் சேவையாற்ற வேண்டும். சர்வாதிகார ஆட்சி நடத்திய அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
100 நாள் திட்டத்தை அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக அமைந்துள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ சொய்சாபுர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdix3.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 02:07.12 PM GMT ]
இச்சந்திப்பின் போது எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை தொடர்ச்சியாக சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்றைய தினமும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் 16 கோரிக்கைகள் முன்வைத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, செயலாளர் நாயகத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdix2.html
Geen opmerkingen:
Een reactie posten