[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 12:42.49 PM GMT ]
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்று முன்தினம் மாலை 06.30 மணியளவில் கணக்காய்வாளரை தேடிச்சென்ற இனந்தெரியாத குழுவினரால், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான அநாகரீகமான சம்பவத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் தனது வன்மையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கொதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவாக முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரை கேட்டுக்கொள்கின்றது.
குறித்த இனந்தெரியாத நபர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdixy.html
வீரவன்ச மனைவி குறித்த இரகசிய பொலிஸாரின் விசாரணைகள் முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 12:51.05 PM GMT ]
சசியின் சாதாரண கடவுச் சீட்டில் பிறந்த வருடமாக 1967 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இராஜதந்திர கடவுச்சீட்டில் பிறந்த வருடமாக 1971 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்விரு கடவுச் சீட்டுக்களிலும் மாறுபட்ட பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdixz.html
Geen opmerkingen:
Een reactie posten