தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

சவூதியில் மூதூர் பெண்ணிற்கு நடந்த நிலை…??

கருணா OUT….

கட்சியின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் அறிவித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கட்சியின் ஆலோசகர்களாக இவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதமர்களான ரத்னசிறி விக்ரமநாயக்க தி.மு.ஜயரட்ன மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய செயற்குழுவின் முழு விபரம்:
தலைவர்: மைத்திரிபால சிறிசேன
ஆலோசகர்கள்: சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ரத்னசிறி விக்ரமநாயக்க, தி.மு.ஜயரட்ன, அலவி மௌலானா
பொதுச் செயலாளர்: அநுர பிரியதர்ஷன யாப்பா
பொருளாளர்: எஸ்.பி.நாவின்ன
தேசிய அமைப்பாளர்: சுசில் பிரேமஜயந்த
சிரேஷ்ட பிரதித் தலைவர்கள்: நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்தன, ஏ.எச்.எம்.பௌசி, ஜனகா பண்டார தென்னகோன்
பிரதி தலைவர்கள்: ராஜித சேனாரத்ன, எஸ்.பி.திசாநாயக்க, பியசேன கமகே, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
http://www.jvpnews.com/srilanka/97532.html


சவூதியில் மூதூர் பெண்ணிற்கு நடந்த நிலை…??

குறித்த பெண்மணி விபத்துக்குள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது அங்கு சென்ற இலங்கை சகோதரர் ஒருவர் இது தொடர்பாக மூதூரைச் சேர்ந்த அங்கு தொழில் புரியும் அப்துல் வாஹித் அம்ஜத் எனும் சகோதரருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அவர் இது தொடர்பாக சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
விபத்துக்குள்ளாகியுள்ள பெண்மணியின் இலங்கை விபரம் கடவுசீட்டு விபரம் போன்றவற்றினை கொண்டுவருமாறு மூதுரை சேர்ந்த அங்கு தொழில் புரியும் அப்துல் வாஹித் அம்ஜதிடம் இலங்கை துவராலய அதிகாரிகள் கோரியுள்ளனர்.
அப்போது குறித்த பெண்மணி தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லாத பட்சத்தில் சமூக வலைத்தளம் ஊடாக குறித்த பெண்மணியின் தகவல்களை திரட்டி சுமார் மூன்று தினங்களுக்கு பின்னர் கடந்த ஐந்தாம் திகதி இலங்கை தூதுவராலயத்தில் குறித்த பெண்மணியின் விபரங்களையும் கடவுசீட்டு விபரங்களையும் கையளித்துள்ளார் மூதூர் சகோதரர் அப்துல் வாஹித் அம்ஜத்.
குறித்த விபரங்களை அப்துல் வாஹித் அம்சத் இலங்கை தூதுவாராலயத்துக்கு கையளித்து சுமார் ஒருவாரகாலம் ஆகியும் இலங்கை தூதுவராலய அதிகாரிகள் எவரும் விபத்துக்குள்ளாகியுள்ள அந்த பெண்மணியை சென்று இதுவரை பார்க்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இது தொடர்பாக ஜித்தாவில் உள்ள இலங்கை தூதுவர் காரியலத்திற்கு சகோதரர் அப்துல் வாஹித் அம்சத் நேரடியாக சென்று அதிகாரிகள் எவரும் சென்று குறித்த பெண்மணியை இதுவரை ஏன் பார்க்கவில்லை என வினவிய போது இவ்விடயம் தொடர்பாக அணுகும் அதிகாரி விடுமுறையில் இலங்கை சென்றுவிட்டதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜித்தா இலங்கை தூதுவராலயத்தை தொடர்ப்புகொண்டு வினவியபோது இவ்விடயங்கள் தொடர்பாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அதிகாரி குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு பின்னரே அதாவது கடந்த பத்தாம் திகதியே இலங்கைக்கு விடுமுறையில் வந்துள்ளார்.
மனிதர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்ட இந்த காலகட்டத்தில் இரு கால் எலும்புகள் முறிந்து படுக்கையில் கிடக்கும் மூதூர் பெண்மணி விடயத்தில் இலங்கை தூதுவர் காரியாலய அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளவது சர்வ சாதராணமான விடயம்தான் என்றாலும்….
இவ்விடயம் தொடர்பாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரி சலீம் அவர்களை தொடர்ப்பு கொண்டு வினவியபோது இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கும் பொறிமுறை ஒன்று உள்ளதாகவும் அது தொடர்பான பூரண விளக்கத்தையும் எமக்கு அளித்தார்.


இந்த சம்பவத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு  தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட பெண்மணியின் மருத்துவ நடவடிக்கைகளுக்காகவும் அமைச்சர் தாளத அத்துகோரள அவர்களிடத்தில் நேரடியாக முறையிடுவதற்காக விபத்துக்குள்ளான பெண்மணியின் கடவுசீட்டு விபரங்களை சவுதியில் இருக்கும் மூதூர் சகோதரர் அப்துல் வாஹித் அம்சத்  உறுதிப் படுத்தினார்.Mutur 2Mutur
http://www.jvpnews.com/srilanka/97548.html

Geen opmerkingen:

Een reactie posten