தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

வரும் திங்கட்கிழமை ஜெனிவா கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை….

மகிந்தவும் சந்திரிக்காவும் சந்திப்பு?

நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படவிருப்பதாக சுதந்திரக் கட்சியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுத் தேர்தல் பிரசார விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97412.html

வீதியில் இறங்கி, போராட்டம் நடத்த நேரிடும் – அமைச்சர் குணவர்தன

மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இந்த அநீதி அழுத்தங்கள் காரணமாகவே நான் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்ப்பை வெளியிட்டு வெளியே வந்தேன்.
இளைஞர்கள் அரச ஊழியர்கள் புத்திஜீவிகள் மூன்று வேளை உண்ண உணவில்லாதவர்கள் நாட்டில் கோரிய மாற்றத்திற்கு பங்களிப்பு வழங்கினோம். ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுகின்றேன். இன்று சிலர் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.
எனினும் அந்தக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இவர்களை ஐந்து சதத்திற்கேனும் மதிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்திய போது நாம் நாட்டுக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் ஆயுத பலத்தினால் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டது.
நாம் அந்த அனைத்து திட்டங்களையும் முறியடித்தோம் ஆயுத பலத்தை மக்கள் பலத்தினால் தோற்கடிக்கச் செய்தோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97415.html

காணி விடுவிக்கும் அமைச்சர்! 

கடற்படை வசமுள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்று வருகை தந்திருந்த அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அரசாங்கத்தினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் காணிகளில் தேவையற்ற காணிகளை விடுவிப்பதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கான அனுமதி அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு காணிகளை விடுவிப்பது என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான முடிவு இல்லை. அது ஒட்டுமொத்த மாகாணங்களுக்காக எடுக்கப்பட்ட பொது முடிவாகவே உள்ளது.
இருப்பினும் வடக்கிணைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக வலி.வடக்கினைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தினால் பிடித்து வைத்துள்ள காணிகளில் தேவைக்கு அதிகமான காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்கள் அதில் மீள்குடியேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் எவ்வளவு வேகமாக செய்து முடிக்க முடியுமோ அந்தளவு வேமாக நடமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/97418.html

இலங்கை வரும் வெளிநாட்டு பணத்திற்கு ஆப்பா….

மத்திய வங்கியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் போதும் இதேநிலைமை காணப்பட்டிருந்தது. எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த சிக்கல் தணிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறின்றி புதிய அரசாங்கம் வெளிநாட்டவர்களால் சிறிலங்காவில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிடுகின்ற பணம் இரண்டு நாட்கள் வரையில் மத்திய வங்கியினால் தேக்கி வைக்கப்படுகிறது.
அது தொடர்பான முழுமையான ஆய்வின் பின்னரே இந்த பணத்தை உரியத் தரப்பினருக்கு வழங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்திகள்
http://www.jvpnews.com/srilanka/97421.html

வரும் திங்கட்கிழமை ஜெனிவா கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை….

இதுதொடர்பாக ஏற்கனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை இன்று நியுயோர்க்கில் சந்திக்கும் போதும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவுள்ளார். எனினும், இதுதொடர்பான இறுதி முடிவு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்த அறிக்கை தொடர்பாக வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குழுக் கூட்டம் ஒன்றில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அறிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறுகிறது.
http://www.jvpnews.com/srilanka/97430.html

Geen opmerkingen:

Een reactie posten