தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதியை சந்தித்த போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா

மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பாரியளவு கடன் வட்டி! அமைச்சர் அர்ஜூன
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 01:59.45 AM GMT ]
மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு பாரியளவு கடன் வட்டி செலுத்த நேரிட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்ட மத்தள விமான நிலையம் மற்றும் மற்றம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியனவற்றுக்காக பாரியளவில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களுக்காக மிகக் கூடுதலான வட்டித் தொகையை செலுத்த நேரிட்டுள்ளது.
எவ்வாறெனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் பகுதியின் இரண்டாம் கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்தளை விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன தொடர்வில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படும்.
தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.



கொழும்பில் கோத்தாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! - முஜிபுர் ரஹ்மான்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 12:18.12 AM GMT ]
கொழும்பு வாழ் மக்களுக்கு இனி மேல் கோத்தபாய ராஜபக்சவினுடைய ஆதிக்கம் கிடையாது என மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் கொழும்பு வாழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் யுகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.
தெமட்டகொடை பொதுச் சந்தை கட்டட தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு வாழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு குரல் கொடுத்து வந்துள்ளோம்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கொழும்பு வாழ் மக்கள் பல இன்னல்களுக்கு முகங் கொடுத்தனர்.
வீடுகள் உடைக்கப்பட்டன. பலவந்தமாக காணிகள் பறிக்கப்பட்டன.
இது தொடர்பில் பல தடவைகள் நீதிமன்ற வாசலில் வீற்றிருந்தோம்.
எனினும் ராஜபக்ஷ குடும்ப ஆட்சியில் கொழும்பு வாழ் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர்.
 இந்தநிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியானது நாடளாவிய ரீதியில் தோல்வி காணும் போது கொழும்பு மாநகரில் ஐ. தே. க. வாக்கு வங்கியை எம்மால் பாதுகாக்க முடிந்தது.
எனவே கொழும்பு வாழ் மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி நன்றிக்கடன் பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு நகரில் மக்களின் வாழ்க்கையில் இனிமேல் கோத்தபாய ராஜபக்சவின் ஆதிக்கம் இருக்காது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnr6D.html


இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதியை சந்தித்த போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 01:09.49 AM GMT ]
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த  போது,  டில்லியில் வைத்து முக்கிய போர்க்குற்றவாளிகளில் ஒருவரான  இலங்கை இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியை சந்தித்துப் பேசியுள்ளார்.
அண்மையில் இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டில்லியில் உள்ள ஐரிசி மௌரியா செரட்டன் விடுதியில் தங்கியிருந்தார்.
எதிர்பாராதவிதமாக, அங்கு வந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
முன்னர், ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தற்போது புதுடில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கை நெறியை மேற்கொண்டு வருகிறார்.
போரின் இறுதிக்கட்டத்தில், சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் போராளிகள், தலைவர்கள் மற்றும் பொதுமக்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட தளபதி  இவரே என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnr6G.html

Geen opmerkingen:

Een reactie posten