தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

வடமாகாணசபை இனவழிப்பு தீர்மானம்! ஏமாற்றமளிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

யாழ்.நாவற்குழியில் டக்ளஸ் மற்றும் வீரவன்சவின் கூட்டு மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:41.47 PM GMT ]
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக, தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக காட்டிக் கொள்ள போலி காணி ஆவணங்களை வழங்கி முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மோசடி புரிந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடந்த வருடம் யாழ்.குருநகர் ஐந்து மாடி கட்டிடம் மீள் புனரமைப்பிற்குட்படுத்தப்பட்டு மக்களிடம் மீள கையளிக்கும் நிகழ்விற்கு விமல் வீரவன்ச வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், நாவற்குழி பகுதியில் சிங்கள மக்களுக்கு அருகில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் காணி ஆவணங்களை, கையளிப்பதாக பெருமளவு மக்களை டக்ளஸ் தேவானந்தா அழைத்திருந்தார்.
எனினும் சுமார் 10 பேருக்கு மட்டுமே அந்த இடத்தில் வழங்கப்பட்டு மற்றைய மக்கள் ஏமாற்றி அனுப்பப்பட்டிருந்தனர்.
ஏனைய மக்களுக்கு பின்னர் காணி ஆவணங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டபோதிலும். அவை வழங்கப்படவில்லை.
இதேவேளை, காணி ஆவணங்கள் வழங்கப்பட்ட மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கும் விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட காணி ஆவணங்களில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முத்திரை இடப்படாததுடன், தமிழ் மொழியில் பல எழுத்துப் பிழைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.
இதனை இன்றைய தினம் குறித்த நாவற்குழி மேற்கு பகுதிக்கு விஜயம் செய்திருந்த பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இதன்போது அதனை பிரதியமைச்சரும் ஒத்தக்கொண்டுள்ளதுடன், மாற்று ஆவணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgr6.html

வடமாகாணசபை இனவழிப்பு தீர்மானம்! ஏமாற்றமளிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:20.26 PM GMT ]
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 
கடந்த நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய போதே அவர், இதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்புக் குறித்து வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தகவல் வெளியிடுகையில்,
வடக்கு மாகாணசபையினால், இனப்படுகொலை குறித்து தீர்மானம், நிறைவேற்றப்பட்டது,
மாகாணசபையின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது என்பதே ஜனாதிபதியின் கருத்தாக இருந்தது.
போர்க்குற்றச்சாட்டுகளை இனப்படுகொலை என்று அழைக்க முடியாது.
நல்லிணக்க முயற்சிகளை புதிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போது, வடக்கு மாகாண சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தாக, குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன், அவரது ஆலோசகரும், கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோவும் கலந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgr4.html

Geen opmerkingen:

Een reactie posten