[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:15.01 PM GMT ]
கடந்த 8ம் திகதி இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது.
மேலும் இதுசம்பந்தமாக கடந்த கிழமைகளில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தி தவறணையை எடுக்க கோரிக்கை விடுத்து சுழிபுரம் பிரதேச சபை தவிசாளர் முன்னிலையில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார்கள்.
அது சம்பந்தமாக வடமாகாண சபை முதல்வரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
சனிகிழமை இரவு தவறணைக்கு முன்னால் உள்ள வேலி எரிக்கப்பட்டதாலே ஆவேசம் அடைந்த மக்கள் தவறணையை உடைத்ததாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இதுசம்பந்தமாக வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgr3.html
தென் மாகாண சபை உறுப்பினர் சம்லி விதானச்சிக்கு மீண்டும் விளக்கமறியல்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:10.56 PM GMT ]
பிட்டிகல, நியாகம ஆகிய பிரதேசங்களிலுள்ள வீடுகளுகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் என்பவற்றுக்குச் சென்று ஆயுதங்களைக் காட்டி மிரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலின் போதும் இவர் இவ்வாறு ஆயுதங்களைக் காட்டி அப்பிரதேச மக்களை மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:05.11 PM GMT ]
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாவட்ட விவசாயிகள் கடந்த காலங்களில் போர் உள்ளிட்ட பல பாதிப்புக்களுக்குட்பட்டவர்கள். ஆனாலும் அவர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் இல்லாமல் இப்போதும் பாதிப்பிற்குள்ளாகின்றார்கள். ஆனால் எங்கள் பாதிப்புக்கள் தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோன்று மத்திய,மாகாண அரசாங்கங்களும் எங்களை கைவிட்டிருக்கும் நிலையில் நாம் நிர்க்கதி நிலையில் இருக்கின்றோம்.
மேலும் இரணைமடுக் குளத்தின் பொறியியலாளராக இருந்த வரை தற்போது மாற்றியிருக்கின்றார்கள். அவர் அங்கிருந்த காலத்தில் இரணைமடுக்குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தவர்.
அவரை மாற்றியதற்குப் பல காரணங்கள் கூறுகின்றார்கள். குறிப்பாக 5வருடங்கள் ஒரு பிரதேசத்தில் சேவையாற்றியிருந்தால் அவர் மாற்றத்திற்குள்ளாக்கப்பட வேண்டும் என்று ஆனால் 5 வருடங்கள் கடந்தும் மாற்றம் பெற்றுக் கொள்ளாத பல அதிகாரிகள் இருக்கின்றார்கள்.
எனவே குறித்த பொறியியலாளர் சிறுபோகம் வரையிலாவது தனது கடமையில் இருக்கவேண்டும்.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கிளிநொச்சி, புளியம்பொக்கணை, உருத்திரபுரம் ஆகிய பகுதி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தின் கீழ் விதைநெல் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டபோதும்.
அந்த நெல் வழங்கப்படவில்லை. இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினரே காரணம் என கூறப்படுகின்றது.
இவ்வாறு அனைத்தினாலும் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகளே. எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் எங்களுடைய பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்படாவிட்டால் நாங்கள் விரைவில் விவசாயிகளை ஒன்றுதிரட்ட ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgr1.html
அவுஸ்திரேலியா அகதிகளின் பிள்ளைகளை தடுத்து வைப்பது சட்டவிரோதமானது!
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 02:03.51 PM GMT ]
அரசாங்க நிதியுதவியில் இயங்கும் இந்த ஆணைக்குழு, நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சிறார்கள், எதிர்கொள்ளும் உடல், உள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான துன்பங்களை விபரித்துள்ளது.
சிறார்கள் துன்பங்களுக்கு உள்ளாகும் இத்தகைய 11 தடுப்பு முகாம்களில், படகுகளில் வந்தவர்களை அனுப்பி வைக்கும், நாட்டுக்கு வெளியேயான தடுப்பு முகாம்களும் அடங்குகின்றன.
இது குறித்த ஒரு தேசிய விசாரணை நடத்தப்படுவதுடன், அந்தச் சிறார்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை அவுஸ்திரேலிய தலைமை அரச வழக்கறிஞர், ஜோர்ஜ் பிராண்டிஸ் மறுத்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgr0.html
Geen opmerkingen:
Een reactie posten