கடந்த டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எகிப்தைச் சேர்ந்த தொழிலாளர்களை லிபியாவில் வைத்து ஐ.எஸ் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக தரையில் நிறுத்தி அவர்களின் தலைகள் துண்டிக்கப்படுவது போன்ற வீடியோ காட்சியே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கொடூர செயலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி கூறியுள்ளார்.
வலுவான அரசாங்கமொன்று இல்லாத லிபியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
லபியாவில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் இயங்கிவருகின்ற நிலையில் ஐ எஸ் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தகுந்த பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் என எகிப்தின் சிறுபான்மையின மதத் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில் ஏழு நாள் துக்க தினம் பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten