தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

சகல துறைகளிலும் தன்னிறைவு கண்ட மாகாணமாக கிழக்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சர் ஹாபிஸ்

திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து தயாசிறி மற்றும் அனுரவிடம் விசாரணை
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 01:59.52 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பிலான ஆவணங்களையும் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகச் சந்திப்பில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த ஊடகச் சந்திப்பில் தயாசிறி ஜயசேகரவும், அனுரபிரியதசர்ன யாபாவும் பங்கேற்றிருந்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த காரணத்தினால் அவர்களிடமும் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்த ஏமாற்றியமை மற்றும் ஜனாதிபதி தேர்தலை சுயாதீனமான முறையில் நடாத்த இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhp4.html

பொதுத்தேர்தல் பழைய, புதிய முறைப்படி நடத்தப்படும்: ராஜித
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 02:40.20 AM GMT ]
எதிர்வரும் ஜூனில் நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தல் பழைய மற்றும் புதிய முறையின்படி நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன்னர் அரசியல் அமைப்பு திருத்தப்படாதுபோனால் தற்போதைய மாவட்ட மட்டத்தில் தேர்தல் நடத்தப்படும்.
இல்லையேல், தொகுதி மற்றும் விகிதாசார முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதிக்கு உள்ள அபரிமித அதிகாரங்களை அகற்றும் நடவடிக்கை ஏப்ரல் 23ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாடாளுன்றத்துக்கு பதில் சொல்லக்கூடியவராக மாற்றப்படுவார் என்றும் அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhp5.html

படகுகளை விடுவிக்கும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு மோடியிடம் கோரிக்கை
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 03:02.32 AM GMT ]
இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவித்து தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், குறித்த குழு பிரதமமந்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதேவேளை படகுகளை மீட்பதற்கு இந்திய மீனவர்கள் இலங்கைக்கு செல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது குறித்த மீனவர்களுக்கு விமானப் பயணக்கட்டணங்கள் உட்பட்ட அதிக செலவுகள் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே ராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி குறித்த படகுகளை மீட்டுத்தருமாறு குழுவின் தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார்
இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்டபேச்சு மார்ச் 5ஆம் திகதி
இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம் இந்த திகதியை குறித்துள்ளது இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கனவே முதல்கட்ட பேச்சுவார்த்தை 2014ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதியும் மே மாதம் 27ஆம் திகதியும் நடைபெற்றன.
இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழக மீளவளத்துறை செயலாளர் எஸ் விஜயகுமார் இந்திய வெளியுறவு இணைச்செயலர் சுச்சிரா துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhp6.html

சகல துறைகளிலும் தன்னிறைவு கண்ட மாகாணமாக கிழக்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சர் ஹாபிஸ்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 03:19.26 AM GMT ]
மூன்று மாவட்டங்களையும் மூவின மக்களையும் பிரதிநிதிபடுத்துகின்ற இந்த கிழக்கு மாகாண சபையில் அதன் முதலமைச்சராக பணியாற்றக் கிடைத்த மகத்தான சந்தர்ப்பத்தையிட்டு முதலில் இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன் என கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் தனது கடமைகளைப் பொறுப்பெற்றுவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
என்மீது நம்பிக்கை வைத்து இப்பாரிய பொறுப்பை எனக்கு வழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் இந்த நாட்டை வழிநடத்துகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் எனது விசேட நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.
அதுபோலவே எனது கட்சியின் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் குறிப்பாக இந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற அத்தனை உறுப்பினர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
கடந்த அரசினால் எமது கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இப்பதவியை எமக்காக விட்டு தந்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்திய எனது மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் நஜீப் எ மஜீத் அவர்களுக்கும் எனது சிறப்பு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த நாட்டில் நிலவிய யுத்த வடுக்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களில் கிழக்கு மாகாணமும் ஒன்று.
அந்த வகையில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்த மாகாணத்தில் பின்னடைந்து காணப்படுகின்ற மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கும் இந்த மாகாணத்தில் முடங்கிப்போய் கிடக்கிற பொருளாதார அபிவிருத்திகளை துரித வேகத்தில் மீள கட்டி எழுப்புவதற்கும் நாம் முழு மூச்சுடன் செயட்பட்டாக வேண்டும்.
சகல துறைகளிலும் தன்னிறைவு கண்ட மாகாணமாக இதை நாம் மாற்ற வேண்டும்.
சகல இன மக்களும் சாந்தி சமாதானத்துடன் ஒன்றிணைத்து பின்னிப்பிணைந்து செழிப்புடன் வாழ்கின்ற ஒரு முன்மாதிரி மாகாணமாக இதை மாற்ற வேண்டும்.
நமக்கிருக்கின்ற மிக குறுகியகால எல்லைக்குள் இந்த இலக்குகளை நாம் அடையப் பெறுவதற்கு நமக்குள் இருக்கின்ற குறுகிய அரசியல் மனப்பாங்கையும் கருத்து வேறுபாடுகளையும் கட்சி வேறுபாடுகளையும் இன ரீதியான எண்ணங்களையும் தூக்கி எறிந்து மக்கள் மாகாணம் நாடு என்ற ரீதியில் நாம் செயல்பட்டாக வேண்டும்.
நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியை கொண்டோ அல்லது மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் யாரும் யாருக்கும் எந்தவொரு அநீதியும் புறக்கணிப்பும் செய்ய இடமளிக்க போவதில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.
கடந்த காலங்களில் நான் வகித்த அமைச்சு பதவியை கொண்டு இயன்றவரை சேவை செய்ய எனக்கு ஒத்தாசை புரிந்த அத்தனை அதிகாரிகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அதேபோன்று என் மீது இப்போது சுமத்த பட்டிருக்கின்ற இந்த பொறுப்பையும் என்மீது இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் நமது மக்களும் நீங்களும் எனது கட்சியும் வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் வீணடிக்காமல் முழுமையாக நிறைவேற்ற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துளைபுக்களையும் எதிர் பார்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhp7.html

Geen opmerkingen:

Een reactie posten