[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 11:52.36 PM GMT ]
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய “வற்” வரி மோசடியாக கருதப்படும் இந்த வற் வரி மோசடி தொடர்பாக மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்றாவது பிரதிவாதியான வர்த்தகர் ரiத் மொஹமட் முர்ஷித்துக்கு 280 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஏழாவது பிரதிவாதியான நாகூர் அடுவை மொஹமட் ஹஸ்தினி என்ற அப்துல் இப்றாஹீமுக்கு 120 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தன.
பிரதிவாதிகள் இருவரின் உடல் நிலை சரியில்லை என்றும் அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி வசந்த வணிகசேகர கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேல் நீதிமன்ற நீதவான் பிரதிவாதிக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்குமாறும் சிறைச்சாலை அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.
இரகசியப் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் காரணமாக பிரதிவாதிகள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வற் வரி மோசடி தொடர்பாக இந்த வழக்கில் மோசடி காரணமாக நாட் டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கருத்திற்கொண்டு இவர்கள் மோசடி செய்த தொகையைப் போன்று மூன்று மடங்கு தொகையுடன் தண்டப்பணத்தையும் அரசுக்கு செலுத்த வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற நீதிவான் குமுதினி விக்கிரமசிங்க சகல பிரதிவாதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
2014 செப்டம்பர் மாதம் 26ம் திகதி வழங்கிய இந்த உத்தரவுக்கமைய 3வது பிரதிவாதியான மொஹமட் முர்ஷித் 1119 கோடியே 80லட்சத்து 24ஆயிரத்து 454ரூபா 65 சதத்தை அரசுக்கு செலுத்துவதுடன் தண்டப் பணமாக 635 கோடியே 11லட்சத்து 87ஆயிரத்து 789ரூபா 20 சதத்தை செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
7வது சந்தேக நபராக அப்துல் இப்றாஹிமுக்கு 1198 கோடியே 80லட்சத்து 24ஆயிரத்து 454 ரூபா 65சதத்தை அரசுக்கு செலுத்துவதுடன் தண்டப் பணமாக 249 கோடியே 54லட்சத்து 21ஆயிரத்து 680 ரூபா 40 சதத்தை தண்டப்பணமாகவும் செலுத்த வேண்டு மென்றும் உத்தரவிடப்பட்டது.
பிரதிவாதிகள் இந்த தொகையை செலுத்தத் தவறின் அவர்களது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு அதற்கான பணம் அறவிடப்படும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 8 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்த 2014.09.26ம் திகதி வற் வரி மோசடியுடன் தொடர்புடைய 14 பிரதிவாதிகளுக்கும் தண்ட னைகள் வழங்கப்பட்டன.
எனினும் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த மேற்படி 3வதும் 7வதும் பிரதிவாதிகள் இருவரும் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.
இவர்கள் ஆஜர்படுத்திய இரகசிய பொலிஸார் 2014.09.26ம் திகதி தீர்ப்புக்கு அமைய சிறைத் தண்டனை நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கமைய பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 280 வருட மற்றும் 180 வருட சிறைத்தண்டனையை நேற்று 10ம் திகதி அமுல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக இந்த சிறைத்தண்டனையை வழங்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, வற் வரி மோசடி தொடர்பான வழக்கில் பிரதிவாதிகள் 14 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வருமான வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக விருந்த ஞான திலக்க த சொய்ஸா ஜயதிலக்க மற்றும் திணைக்களத்தின் ‘வற்’ வரி பிரிவின் உதவி ஆணையாளராக இருந்த ஆனந்த அம்பேபிட்டிய உட்பட பிரதிவாதிகள் 6 பேருக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கிணங்க சிறைத்தண்டனை மற்றும் தண்டப் பணம் என்பவற்றுடன் அரசுக்கு அறவிட வேண்டிய தொகை குறித்தும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த மோசடிக்கு தொடர்புடைய பாகிர் மொஹமட், ஷிபாட் அல்லது ரியாத் மொஹமட் சுபைர் அவாமி, மொஹமட் அமீர், இர்ஷாத் என்கிற மொஹமட் நiர் காதர், மொஹமட் காமில், குதுபுதீன், அப்துல் வதுத் என்ற டீரா, பைரு அலி, மற்றும் மொஹமட் கானில் ஆகிய வழக்கின் 4, 5, 6, 8, 9வது மற்றும் 12வது பிரதிவாதிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள இவர்களை கைது செய்வதற்கும் நீதிமன்றம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdhpy.html
ஜனாதிபதி செயலக வாகனங்களை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை! மன்னிப்பே கிடையாது!- பொலிஸ் தலைமையகம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 11:57.33 PM GMT ]
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 749 வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பலரும் வாகனங்களை ஒப்படைத்தனர். சிலர் வெளிநாடு சென்றதால் அதற்குப் பதிலாக வேறுநபர் ஊடாகவும் வாகனங்கள் ஒப்படைக்கப் பட்டன. சில இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் வாகனங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று 10 ம் திகதி வரையில் 21 வாகனங்கள் இன்னமும் காணாமற் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே நேற்று முதல் ஜனாதிபதி செயலக வாகனங்களை வைத்திருப்போருக்கு மன்னிப்பு வழங்கப்படுவதில்லை என பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
அரசாங்க வாகனத்தை சட்ட விரோதமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.
இன்று முதல் வாகனத்தை ஒப்படைப்பார்கள் என்று கருதாமல் சட்ட விரோதமாக வைத்திருந்தார்கள் என்றே கருதப்படுவார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdhpz.html
ஐதேக அரசின் ஊழல் மோசடிகள் குறித்து 10 ஆண்டுகளின் பின்னர் விசாரணை செய்வது நகைப்பிற்குரியது!– ராஜித
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 12:57.09 AM GMT ]
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நிறுவுகின்றமை நகைப்பிற்குரியது.
ஐக்கிய தேசிய முன்னணியின் அரசியல்வாதிகள் ஊழல் மேசாடிகளில் ஈடுபட்டிருந்தால் பத்துஆண்டுகள் வரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மற்றும் அரசாங்கப் பலத்தைக் கொண்டிருந்த பத்து ஆண்டு காலமாக இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னரே, சுதந்திரக் கட்சிக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஊழல் பற்றி ஞாபகம் வந்துள்ளது என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசியக் கட்சியின் கடந்த கால அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து சுதந்திரக் கட்சி முறைப்பாடு செய்ய உள்ளதாக தகவல்கள் பற்றி அமைச்சரிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhp0.html
புதிய அரசாங்கத்தின் சிலருக்கு மஹிந்த பீதி ஏற்பட்டுள்ளது: உதய கம்மன்பில
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 01:14.48 AM GMT ]
புதிய அரசாங்கத்தின் ஒரு சில அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைக் கண்டு அஞ்சுகின்றனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் தோல்வியைத் தழுவும்.
இதனை புரிந்து கொண்டவர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சேறு பூசும் அதேவேளை, சிறையில் அடைக்கப் போவகதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச ஓர் சிங்கம், சிங்கங்கள் அழுத்தங்கள் எச்சரிக்கைகளுக்கு அடி பணியப் போவதில்லை.
அழுத்தங்கள் எச்சரிக்கைகளின் மூலம் சிங்கங்களின் பலம் மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் மஹிந்தவை கைது செய்ய வேண்டுமென விடுத்த கோரிக்கை தொடர்பில் சிங்களப் பத்திரிகையொன்று அவர் இந்த பதிலைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhp1.html
இலங்கைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க மக்ரே நிதி திரட்டுவதாக குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 01:49.48 AM GMT ]
கலம் மக்ரே இலங்கைக்கு எதிராக மற்றமொரு புதிய ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க ஆயத்தமாகி வருகின்றார்.
இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு 10,000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நிதி திரட்டப்பட்டு வருகின்றது.
விசேட நிதியமொன்றை ஆரம்பித்து அதன் ஊடாக இவ்வாறு பணம் திரட்டப்பட உள்ளது.
இலங்கைக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தி இவ்வாறு பணம் திரட்டப்பட்டு வருவதாக லண்டனைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிங்ஸ்வாடர் என்னும் பெயரில் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சனல்4 நிறுவனத்திற்காக ஏற்கனவே இவ்வாறான நிதியங்களின் ஊடாக மக்ரே பணம் திரட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhp2.html
Geen opmerkingen:
Een reactie posten