தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

தமிழர்கள் தன்னாட்சியுடன் கூடிய தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும்!– இரா.சம்பந்தன்

சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக்காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 03:41.55 AM GMT ]
சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக் காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
மஹரகம இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுயாதீனமான சுகாதார சேவை ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தடையாக அமைந்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கோரினார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் சுகாதார சேவை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
தேவையான அளவு மனித வளத்தை வழங்கி நாட்டின் சுகாதார சேவையை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhqy.html

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு சமாதான பிரகடனம் உத்வேகம் அளிக்கும்: ஜெனீவா பிரதிநிதி
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 04:18.27 AM GMT ]
இலங்கையின் சுதந்திர தினத்தன்று கோட்டே ஜெயவர்த்தனபுரவில் மேற்கொள்ளப்பட்ட “சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளித்துள்ளதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முன்னர் இடம்பெற்ற பிழைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உறுதிசெய்து கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமதான பிரகனடத்தை புலம்பெயர்ந்தோர் உரிய வகையில் ஏற்று, இலங்கையின் நல்லிணக்கத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமாதானம் என்பது சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே மேம்படுத்தப்படும் என்றும் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhq0.html

வடக்கு அதிவேக வீதி செயற்திட்டம் ஆய்வின் பின்னர் மீண்டும் செயற்படுத்தப்படும்: கபீர் ஹாசீம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 04:27.53 AM GMT ]
கடந்த அரசாங்கத்தின் மூலம் செயற்படுத்தப்படவிருந்த வடக்கு அதிவேக வீதி செயற்திட்டம் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் செயற்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடந்த அரசாங்கத்தில் வீதி செயற்திட்டத்துக்காக மதிப்பீடு செய்யப்பட பணம் குறைக்கப்பட்டு, வீதி வேலைகள் செயற்திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் இடை நிறுத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கு அதிவேக வீதி கடந்த அரசாங்கத்தின் கீழ் செயற்படுத்த தீர்மானித்திருந்தும் அதற்கான ஆரம்ப நிதி ஒதுக்கீடுகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மீண்டும் மேற்கத்தைய சூழ்ச்சி: விமல் வீரவன்ச
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 04:31.52 AM GMT ]
நாட்டில் மீண்டும் மேற்கத்தைய சூழ்ச்சி மேற்கொள்ளப்படலாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேற்கத்தைய சூழ்ச்சியின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி கவிழ்க்கப்பட்டார் என்று விமல் வீரவன்ச முன்னர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை மேற்கத்தைய சூழ்ச்சி இலங்கை அரசியலுக்குள் மேற்கொள்ளப்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில் மேற்கத்தைய நாடுகள் குற்றம் சுமத்தவில்லை.
எனினும் மஹிந்தவின் ஊழல்களை மாத்திரம் மேற்கத்தைய நாடுகள் பெரிதுபடுத்துவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று சபையின் சட்டமூலம் விரைவில்: அனுர குமார
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 04:48.22 AM GMT ]
தேசிய நிறைவேற்று சபையில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்ட விதத்தில் அரசியலமைப்புக்கு அமைவாக சட்டமூலம் ஒன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அகற்றுதல், ஒரு சுதந்திரமான தேர்தல் ஆணையம் நிலைநாட்டுதல், பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதியில் இடம் பெறுதல் போன்றவை குறித்த சட்டமூலத்தில் அடங்கும் என திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
விரிவான சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் புனரமைப்புகளுக்காக கடந்த 15 ஆம் திகதி நிறைவேற்று சபை, ஜனாதிபதி செயலகத்தில் முதல் தடவையாக கூடியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க, ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், மற்றும் சரத்பொன்சேகா, மனோ கணேசன், ஆர்.சம்பந்தன், ஆகியோர் நிறைவேற்று சபையில் அங்கம் வகித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhq3.html

தாதியர் சபையை ஸ்தாபிக்காமைக்கான காரணத்தை விளக்குகிறார் ஜனாதிபதி
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 05:23.11 AM GMT ]
தாம் சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தாதியர் சபையை செயற்படுத்த முடியாமல் போனமைக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தினார்.
மஹரகம இளைஞர் சேவை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற அரச தாதியர் உத்தியோகர்களுக்கான விசேட செயலமர்வில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார்.
தாதியர் சபைக்கு பொருத்தமான ஒருவரை நியமிப்பதற்கு தான் இரண்டரை வருட காலம் தாமதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதற்கு காரணம் தாதியர் சேவைக்கான சட்டமூலத்திற்கு அமைய தாதியர் சபைக்கு தேவையானவர்களை நியமிக்க அமைச்சர் என்ற வகையில் எனக்கு இடமளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், சட்டமூலத்திற்கு புறம்பானவர்களை இறுதி கட்டத்தில் நியமிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhq4.html

பிரதமர் பாதுகாப்பு பிரிவிற்கு புதிய அதிகாரிகள்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 05:27.51 AM GMT ]
பிரதமர் பாதுகாப்பு பிரிவிற்கு புதிய பிரதி பொலிஸ் அதிகாரியாக ஜயந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் கடமை புரிந்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஜெனராலாக கடமை புரிந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அசங்க கரவில பிரதமர் பாதுகாப்பு பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் 100 வீதம் ஜனாதிபதி, பிரதமருடன்!– மேர்வின் சில்வா
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 05:52.52 AM GMT ]
எனது 100 சதவீத ஆதரவு ஜனாதிபதி பிரதமருக்கே என முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக மேர்வின் சில்வா குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் எப்பொழுதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பதனால் தனது ஆதரவு ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhq6.html

மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கவெனக் கூறி பணம் சேகரித்த இருவர் கைது!
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 05:59.33 AM GMT ]
புலமைப்பரிசில் வழங்கவெனக் கூறி சட்டவிரோதமாக பணம் சேகரித்த இருவர் செவனகல , மஹிந்துபுர பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஸ்டிக்கர்களை வழங்கி நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வசமிருந்து 37,000 ரூபா பயணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 26 மற்றும் 63 வயதான செவனகல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களை இன்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் தன்னாட்சியுடன் கூடிய தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும்!– இரா.சம்பந்தன்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 06:51.44 AM GMT ]
தமிழர்கள் தமது பிரதேசத்தில் தன்னாட்சியுடன் கூடிய தீர்வையே விரும்புவதாகவும், அத்தகைய நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவினரிடமே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து நேரில் கண்டறிவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலகத் திணைக்களத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒருவாரகால பயணமாக  இலங்கை வந்துள்ளது.
இந்தக் நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ராவோ ஹூஐஹூவா, அதன் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாங் ஜியுகுயிங் மற்றும் டேன் வேய் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்‌சவின் அணுகுமுறைக்கும், தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடு குறித்து சீன தூதுக்குழுவினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்.
“ஒரே நாடு, ஒரே மக்கள் என உதட்டளவில் கூறிக்கொண்ட போதிலும் மகிந்த ராஜபக்‌ச சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக மட்டுமே நடந்து கொண்டார்.
தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ அனைவரையும் உள்ளடக்கியதான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றார். அனைத்து மக்களின் பிரதிநிதியாக இருக்க விரும்புகின்றார். அனைவரது கருத்துகளையும் செவிமடுத்து முன்செல்ல விரும்புகின்றார்.
இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் நியாயமான ரீதியில் நடந்து கொள்ள விரும்புபவர்கள். ஆனால், அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும். துரதிர்ஷ்டவசமாக மகிந்த அதைச் செய்திருக்கவில்லை.
தாம் அதிபராக இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமையால் சிங்கள மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தமக்கே வாக்களிப்பார்கள் என மகிந்த எண்ணியிருந்தார். ஆனால், சிங்கள மக்கள் அந்த எண்ணத்தைப் பொய்ப்பித்து விட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்குத் ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏன் தேசிய அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வினாவுக்கு இரா. சம்பந்தன், பதிலளிக்கையில்
“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய அரசு குறுகிய காலத்திற்கே இருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெறுவது தீர்வாக அமைந்துவிடாது. மாறாக, காத்திரமான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதான தீர்வையே தமிழர் தரப்பு எதிர்பார்த்து நிற்கிறது.
தமிழர்கள் தமது பகுதிகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தன்னாட்சியுடன் கூடிய தீர்வையே விரும்புகின்றனர்.
இப்படியான ஏற்பாடுகள் உலகின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதைச் செய்தாலும் சீனா தம்மைப் பிணையெடுக்கும் என்ற எண்ணம்  இலங்கை ஆட்சியாளர்கள் மத்தியில் நிலவுகிறது. அத்தகைய எண்ணம் நல்லதல்ல” என்று தெரிவித்தார்.
சீன கம்யூனிஸக் கட்சி உலகளவில் 180 நாடுகளில் 600 ற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக இந்தச் சந்திப்பின் போது ராவோ ஹூஐஹூவா சுட்டிக்காட்டினார்.
2012ம் ஆண்டில் பீஜிங்கில் இடம்பெற்ற கம்யூனிஸக் கட்சியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் பங்கேற்றிருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் கம்யூனிஸக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது நேரடிச் சந்திப்பாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhrz.html

Geen opmerkingen:

Een reactie posten