[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:50.39 AM GMT ]
பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக இன்று பிற்பகல் 02.00 மணிக்கு வருமாறு இந்த அழைப்பு இவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தலைமையில் நாளை பொலிஸ் தலைமையகத்தில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கு அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் மேலும் தெரிவித்துள்ளது.
யாழில் முன்னிலை சோஷலிச கட்சியினர் கையெழுத்துப் போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:55.17 AM GMT ]
இந்தப் போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.
குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விபரங்களை வெளிப்படுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய் ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgvz.html
ரஜரட்ட வைத்திய பீட மாணவர்கள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 07:14.07 AM GMT ]
இச்சந்திப்பு உயர் கல்வி அமைச்சின் அமைச்சர் மாணவர் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் உயர் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது ரஜரட்ட வைத்திய பீடத்தில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, வெளியிலிருந்து வருகை தரும் விரிவுரையாளர்களுக்கு தங்குமிட வசதியின்மை,
விடுதியில் இடப்பற்றாக்குறை, உள்ளிட்ட பிரச்சினைகள் அம்மாணவர்களினால் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்கவிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
சாதாரணமாக விரிவுரையாளர்களின் பற்றாக்குறை ஆரம்ப காலத்திலிருந்தே ஏற்பட்ட பிரச்சினை.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிரேஸ்ட வைத்தியர்கள் அநுராதபுரத்திற்கு செல்ல விரும்பாமையே ரஜரட்ட வித்தியாலயத்தில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண நீண்ட காலம் எடுத்தது என அமைச்சர் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இதன்போது தங்குமிட வசதியின்மையால் வெளியிலிருந்து விரிவுரையாளர்களை வரவழைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என ரஜரட்ட பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
நிரந்தர விரிவுரையாளர்களுக்கு மிக விரைவிலேயே தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுப்பதாகவும் அமைச்சர் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
இதேவேளை வெளிநாடுகளிலுள்ள பட்டதாரி விரிவுரையாளர்களை வரவழைத்து விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்யுமாறு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgv1.html
மகிந்தவும் சந்திரிக்காவும் சந்திப்பு?
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 07:00.10 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய குழு ஆகியவற்றின் விசேட கூட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இந்த இரு கூட்டங்களில் கட்சியின் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படவிருப்பதாக சுதந்திரக் கட்சியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுத் தேர்தல் பிரசார விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgv0.html
Geen opmerkingen:
Een reactie posten