தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்

ரஜரட்ட வைத்திய பீட மாணவர்கள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 07:14.07 AM GMT ]
ரஜரட்ட வைத்திய பீடத்திலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அப்பீட மாணவர்களுக்கும் உயர்கல்வி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு உயர் கல்வி அமைச்சின் அமைச்சர் மாணவர் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் உயர் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது ரஜரட்ட வைத்திய பீடத்தில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, வெளியிலிருந்து வருகை தரும் விரிவுரையாளர்களுக்கு தங்குமிட வசதியின்மை,
விடுதியில் இடப்பற்றாக்குறை, உள்ளிட்ட பிரச்சினைகள் அம்மாணவர்களினால் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்கவிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
 சாதாரணமாக விரிவுரையாளர்களின் பற்றாக்குறை ஆரம்ப காலத்திலிருந்தே ஏற்பட்ட பிரச்சினை.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிரேஸ்ட வைத்தியர்கள் அநுராதபுரத்திற்கு செல்ல விரும்பாமையே ரஜரட்ட வித்தியாலயத்தில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண நீண்ட காலம் எடுத்தது என அமைச்சர் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
 இதன்போது தங்குமிட வசதியின்மையால் வெளியிலிருந்து விரிவுரையாளர்களை வரவழைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என ரஜரட்ட பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
நிரந்தர விரிவுரையாளர்களுக்கு மிக விரைவிலேயே தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுப்பதாகவும் அமைச்சர் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
இதேவேளை வெளிநாடுகளிலுள்ள பட்டதாரி விரிவுரையாளர்களை வரவழைத்து விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்யுமாறு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgv1.html

துமிந்த சில்வா கைது செய்யப்படுவதை தடுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்டம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 07:45.31 AM GMT ]
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்ய வேண்டாம் என புதிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரபல போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படைடையில், துமிந்த சில்வாவை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தயாராகினர்.
அப்படி செய்ய வேண்டாம் என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக துமிந்த சில்வாவிடம் விசாரணை நடத்தும் போது அவருக்கு உச்சளவிலான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நிலைமை புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் பெரும்பாலான பிரதிநிதிகள் ராஜபக்ச அரசாங்கத்துடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்பதுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு செயற்பட்டு வந்தவர்களாவர்.
இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமக்கு உதவியவர்களை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgv6.html

தமிழக அதிகாரிகள் இலங்கை விரைந்தனர்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 07:22.35 AM GMT ]
இலங்கை அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 81 படகுகளையும் மீட்பதற்காக தமிழக அதிகாரிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 81 படகுகள் மீது இலங்கை நீதிமன்றில் வழக்கு இருப்பதால், நீதிமன்றம் மூலம் படகுகளை விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் டி.வினோதன், ஊர்க்காவல் துறை, பருத்தித்துறை நீதி மன்றங்களில் ஆஜராக ஜோய் மகாதேவன் ஆகியோர் இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள், இலங்கையில் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்காக மனு தாக்கல் செய்து படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வக்கீல்களுக்கு உதவுவதற்காக தமிழக அதிகாரிகளான ராமேசுவரம் மீன் துறை உதவி இயக்குனர் கோபிநாத், மீன் துறை ஆய்வாளர் கவுதமன் ஆகிய 2 பேர் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கை சென்றனர்.
81 படகுகளின் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அதிகார ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். இன்று பிற்பகலுக்குள் நீதிமன்றில் இருந்து 81 படகுகளை விடுவிக்க உத்தரவு வந்து விடும்.
இதன் பிறகு 81 படகுகளையும் பழுது பார்த்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வர 150 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழுவினர் இன்று மாலை மீட்பு படகுகளுடன் இலங்கைக்கு செல்ல உள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgv2.html


Geen opmerkingen:

Een reactie posten