[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:44.54 PM GMT ]
மட்டக்களப்பு அதிகார் வீதியில் வசிக்கும் மேற்படி கணக்காய்வு உத்தியோகத்தரின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற இனந்தெரியாத நபர்கள் மூன்று பேர் வீட்டில் தாக்குதலை மேற்கொண்டதுடன், கணக்காய்வு உத்தியோகஸ்தருக்கும் அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது கணக்காய்வு உத்தியோகஸ்தரின் உறவினர் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில் மேற்படி கணக்காய்வு உத்தியோகஸ்தர் வீட்டில் இருக்கவில்லை.
இந்த நிலையில், மேற்படி கணக்காய்வு உத்தியோகஸ்தரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பணிப்பகிஷ்ரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.ரங்கநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdip5.html
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை!-அமைச்சர் திகாம்பரம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:50.53 PM GMT ]
இங்கு வருகை தந்திருக்கின்ற பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், செயலகங்களின் திட்டப் பிரிவு பணிப்பாளர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை தற்பொழுது முன்வைத்திருந்தாலும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கக்கூடிய வேலைத்திட்டங்களை முதனிலைப்படுத்தி தெரிவு செய்து சமர்ப்பிக்குமாறு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில்; பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் திட்டப் பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதிää அமைச்சரின் ஆலோசகர் எம் வாமதேவன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் அரசியல் கட்சி பேதங்கள் மூலமாக பக்க சார்பாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தற்போது எதுவித அரசியல் பேதங்களும் இன்றி நாட்டின் நல்லாட்சிக்கான அரசியல் சூழல் உருவாகியிருக்கின்ற நிலையில் நாமும் அரசியல் கட்சி பேதங்கள் கடந்து சேவையாற்றுவது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.
மலையகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அதிகமாக இருந்தாலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விரைவாக மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களை எமக்கு மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து எமக்கு முன்மொழியுமிடத்து எமது அமைச்சின் மூலமாக விரைவாக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdip6.html
இலங்கையின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும்: சட்டத்தரணிகள் கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 01:58.50 PM GMT ]
2005ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக இருந்த மஹிந்த ராஜபக்ச மீது சுனாமியின் பின்னரான “ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட” நிதிமோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அப்போது பிரதம நீதியரசராக இருந்த சரத் என் சில்வா, அந்த வழக்கில் இருந்து மஹிந்த ராஜபக்சவை விடுவித்தார்.
இந்தநிலையில் தமது தீர்ப்பு பிழையானது என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாக சரத் என் சில்வா கடந்த வருடத்தில் தெரிவித்திருந்தார்.
அவர், மன்னிப்பு கோரிய நடவடிக்கையானது, குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க முடியாது என்பதையே காட்டுகிறது.
இதேவேளை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சி மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோரின் வழக்குகள் அப்போது சட்டமா அதிபராக இருந்த மொஹான் பீரிஸினால் உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை.
இதன்மூலம் மொஹான் பீரிஸ் தீவிரமான நிலையில் சட்டத்தை மீறியுள்ளதாக சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நீதியின் கௌரவம் தற்போது நிலை நாட்டப்பட்டுள்ளது: பிரதம நீதியரசர்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 02:31.36 PM GMT ]
நாட்டில் நீதியின் கௌவரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரம் என்பது ஏதேச்சாதிகாரமாக பயன்படுத்தக் கூடியதல்ல.
அது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டியதாகும் என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனை வரவேற்கும் வகையில் கொழும்பு புதுக்கடை உச்ச நீதிமன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இந்த வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiqz.html
Geen opmerkingen:
Een reactie posten