[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 07:38.34 AM GMT ]
சர்வதேசத்திற்கு மத்தியில் அவர் குற்றவாளியாகி இருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் தோல்வியடைந்ததை அடுத்து கோத்தபாயவின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையில் கைது செய்யப்பட்டால் அது பாரதூரமான நிலைமையாக இருக்காது என்பாதலும் சர்வதேசத்தில் கைது செய்யப்பட்ட பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்ற சந்தேகம் காரணமாகவும் கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்லவில்லை என பேசப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் மகிந்தவின் தோல்விக்கு பின்னர் கோத்தபாய ராஜபக்ச மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவரை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
த.தே.கூ., ஐ.தே.க. வை இணையுமாறு மு.கா. பகிரங்க அழைப்பு! ஆட்சியை தொடர விடமாட்டோம் என்கிறது ஐதேக
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 07:39.17 AM GMT ]
தற்பொழுது அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இணைந்து செயற்பட வருமாறும் அமைச்சர் அக்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட்டாக இணைந்து செயற்பட்டது போன்று கிழக்கு மாகாணத்திலும் செயற்பட ஒன்றிணையுமாறும் அமைச்சர் மேலும் அக்கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. எனவே, மக்கள் ஆணைக்கு முரணாக அமைக்கப்பட்ட ஆட்சியை இரண்டு வாரங்களுக்குக் கூடத் தொடரவிட மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே சவால் விடுத்தார்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்ட போது மௌனியாக இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச வழங்கிய சுகபோகங்களை அனுபவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வாக்களித்தோருடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பது துரோகத்தனமான ஒரு செயற்பாடாகும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjqz.html
கடற்படை தளபதிக்கு ஏற்பட்ட சிக்கல்!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 07:54.48 AM GMT ]
மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொள்ள விரும்பும் கடற்படை அதிகாரிகள் 50,000 ரூபாய் கொடுத்து தங்களுக்கான மோட்டார் சைக்கிள்களை ஒதுக்கிக் கொள்ளலாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடற்படையினர் 50,000 பணம் செலுத்தியும் அவர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை.
இதேவேளை மோட்டார் சைக்கிள் வழங்குவது குறித்து அரசாங்கம் எவ்வித வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjq0.html
இலங்கை வங்கிக்கு புதிய தலைவர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 08:18.46 AM GMT ]
புதிய தலைவர் நாளை திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
வடக்கு கூட்டுறவுதுறையில் பெரும் ஊழல் மோசடி! சாதாரண பணியாளர்கள் பாதிப்பு: சரவணபவன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 08:22.31 AM GMT ]
வடக்கில் கூட்டுறவுத்துறை சீர் குலைந்து போயுள்ளது. ஊழல் மோசடி நிர்வாகங்களால் ஏற்பட்ட சீரழிவுகளினால் சாதாரண பணியாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
எனவே அந்த நிர்வாகங்களை உடன் கலைத்து புதிய நிர்வாகங்களை உடன் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
சபையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் வாக்கெடுப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த பணியாளர்களின் சம்பள அதிகரிப்புப் பற்றி இந்த வரவு-செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படாமை வருத்தமளிக்கும் ஒரு விடயமாகும். கடந்த காலத்தில் இடம்பெற்ற சிறு சிறு சம்பள உயர்வுகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படியாக அந்தப் பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கப்படுவதற்கு அந்தந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் காரணம் காட்டப்படுகிறது.
அரசியல் தலையீடு
ஒரு காலத்தில் வடபகுதியில் கூட்டுறவுச் சங்கங்கள் மிகவும் சிறப்பாக இயங்குவதில் பல அரிய உதாரணங்களை வெளிப்படுத்தின. ஆனால் கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் சங்கங்களின் நிர்வாகத்தில் அதீதமான அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டது. அரசியல்வாதிகளின் எடுபிடிகள் நிர்வாக பீடங்களில் நியமிக்கப்பட்டனர்.
ஊழல்கள், மோசடிகளில் ஈடுபட்டு விட்டு அரசியல் செல்வாக்கினால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டனர். அதன் காரணமாகவே சங்கங்கள் நட்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது.
சர்வாதிகாரத்தின் சீரழிவுகளால் ஏற்பட்ட நட்டத்தின் சுமை சாதாரண பணியாளர்களின் தலையிலேயே சுமத்தப்பட்டது.
எனவே ஏற்கனவே ஆதிக்கம் வகிக்கும் ஊழல், மோசடி நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு கூட்டுறவுத் துறையில் அறிவும், அனுபவமும் வாய்ந்த நேர்மையான மனிதர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளைக் கூட்டுறவுத்துறை அமைச்சரும், அவர்களின் ஊதியத்தை உயர்த்த நிதியமைச்சரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் இந்தச் சபையில் எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
தனித்துவ பட்ஜெட்
இந்த நாடாளுமன்றம் பல வரவு - செலவுத் திட்டங்களைச் சந்தித்துள்ளது. ஆனால் தற்சமயம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் மக்களுக்கு மிக அதிகமான அனுகூலங்களை வழங்கியதன் மூலம் ஒரு தனித்துவமான சாதனையை வெளிப்படுத்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைப்பு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போன்ற எதிர்பாராத வகையிலான வரப்பிரசாதங்களை இந்த வரவு - செலவுத் திட்டம் வழங்கியதன் மூலம் இந் நாட்டு மக்களின் மனதைக் குளிர வைத்துள்ளது.
கடந்த அரசில் இடம்பெற்ற வீண் விரயங்கள், ஆடம்பரச் செலவீனங்கள், லஞ்ச ஊழல் மோசடி நடவடிக்கைகளின் தாக்கங்களைக் குறைத்து மக்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையிலான இந்த அரசின் நன் முயற்சியின் ஒரு பகுதியாகவே இதை நான் பார்க்கிறேன்.
மக்களுடன் நெருக்கமாக உறவாடி, அவர்களின் குறைநிறைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளக் கூடிய பெருமைமிகு ஊடகத் துறையுடன் தொடர்புடையவன் என்ற வகையிலும், மக்களின் தேவைகளை இச்சபையில் சமர்ப்பித்து நிவாரணங்களைக் கோரும் கடப்பாடு உடைய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இங்கு நான் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையில் இந்த வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ள போதிலும் கூட ஒரு சில தரப்பினர் எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேற்றப்படவில்லை எனக் குறைபாடுவதை என்னால் அறிய முடிந்துள்ளது.
தனியார்துறை பங்களிப்பு
இன்றைய பெருளாதாரக் கட்டமைப்பில் நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் தனியார் துறை ஒரு மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது என்பதை மறந்து விடமுடியாது. இந்தத் துறையின் மேம்பாட்டில் இத்துறை சார்ந்த ஊழியர்களின் உழைப்பே மூலாதாரமாக விளங்கி வருகிறது.
எனினும் இங்கு சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் அரச பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். கடந்த காலங்களில் பல பெருந் தோட்டங்களில் முறையற்ற நிர்வாகம் காரணமாகவும், பராமரிப்பு, மீள் நடுகை என்பவற்றில் போதியளவு கவனம் செலுத்தப்படாமையினாலும் தேயிலை உற்பத்தியில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இலங்கை தேயிலையின் உலகத் தரப்பங்கு இருந்த மதிப்பிலும் சரிவு ஏற்படும் நிலைதோன்றியது. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரும் போதெல்லாம் இலாபமின்மை ஒரு காரணமாகக் காட்டப்பட்டது.
எனவே இத்தகைய குறைபாடுகள் களையப்படும் போது தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தப்படுவதில் சிக்கல் இருக்கமுடியாது. எனவே பெருந்தோட்டத்துறை அமைச்சர் இந்த விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் அதேவேளையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை மாதம் 5ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஓய்வூதியம் அதிகரிக்க வேண்டும்
எந்த அரசு ஆட்சியிலிருந்தாலும் கூட அரச நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் அரச சேவைப் பணியாளர்களே. அவர்கள் தமது சேவைக்காலம் நிறைவடையும் போது அவர்களுக்கு அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தமது வாழ்நாளில் முக்கிய பகுதிகளை நாட்டுக்காகச் சேவை செய்து வழங்கிய அவர்களைக் கெளரவிப்பதும், அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியாக வாழ வழி செய்வதும் அரசின் கடமையாகும்.
அவ் வகையிலேயே சிரேஷ்ட பிரஜைகளான அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனினும் இங்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு ஆயிரம் ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா ஊதிய உயர்வு வழங்கப்படும் போது ஓய்வூதியர் களுக்கு ஆயிரம் ரூபா மட்டுமே வழங்கப்படுவது கவலையளிக்கும் ஒருவிடயமாகும்.
இன்றும் சில ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் மூலமே தமது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும்.
குறிப்பாக வடபகுதியில் பல ஓய்வூதியர்கள் போர் காரணமாக உழைக்கும் தகைமையுள்ள தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். பலர் ஊனமுற்ற பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். கணவன்மாரை இழந்து தங்கள் பெண் பிள்ளைகளையும், தகப்பன் தாயை இழந்த பேரப் பிள்ளைகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இப்படியாகச் சில பிரத்தியேகப் பிரச்சினைகளையும் சந்திக்கும் ஓய்வூதியர்களுக்கு இந்த ஆயிரம் ரூபா உயர்வு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. எனவே ஆரம்பத்தில் கூறப்பட்ட தைப் போன்று குறைந்த பட்சம் அவர்களுக்கு 3ஆயிரம் ரூபாவாக ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
2004ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும், பின்பு ஓய்வு பெற்றவர்களுக்குமிடையே கொடுப்பனவில் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு விரைவில் சரி செய்யப்படும் எனப் பலமுறை வாக்களிக்கப்பட்டும் இன்றுவரை அது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அது தொடர்பாகவும் நிதியமைச்சரும், ஓய்வூதியத் திணைக்களமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjq3.html
Geen opmerkingen:
Een reactie posten