தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

பாராளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் நேரடியாக ஒளிபரப்ப திட்டம்



மக்கள் பிரதிநிதிகள் குழப்பம் செய்தால் கன்னத்தில் அறையுங்கள்: பொதுமக்களுக்கு சந்திரிக்கா அறிவுரை
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:50.15 AM GMT ]
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அல்லது முரண்பாடுகளை தோற்றுவித்தால், பொதுமக்களாகிய நீங்கள் அவர்களுடைய கன்னத்தில் அறையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்தக் கூட்டமட் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்து பேசிய முன்னாள் ஜனாதிபதி,
மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எமது பயணத்தை ஆரம்பிக்கும்போது எம்மோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருக்கவில்லை. ஆனால் மக்களாகிய நீங்கள் எமக்கு ஆதரவாக இருந்தீர்கள். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தப் பயணத்தில் பாரிய பங்களிப்பினைச் செய்திருந்தது.
மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் கறைபடியாதவர்களாக இருப்பது மிக அவசியமாகும்.
அந்த வகையில் இந்த புதிய ஆட்சிப் பயணத்தில் இணைத்துக் கொள்வோமானால் நல்ல முறையில் பண்பானதும் ஒழுக்கமுள்ளதுமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
ஆகவே பண்பானா நாட்டை கட்டியெப்பும் பயணத்தின்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் குழப்பங்களை விளைவித்தால் அல்லது குழப்பகரமான சூழலை தோற்றுவித்தால் எந்தவிதத்திலும் தயங்காது பொதுமக்கள் அவர்களது கன்னத்தில் அறையுங்கள்.
மோசடிகாரர்கள், குற்றமிழைத்தவர்கள் எவரும் மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட அருகதையற்றவர்கள்,
இந்த விடயத்தில் நான் உங்களோடு இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjvz.html

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை: ரோசி சேனாநாயக்க
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:50.39 AM GMT ]
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்கவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிறுவர்களை முறையாக பராமரித்து அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக இன்று நாட்டில் காணப்படும் நிலைமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்குகுழிகள் அமைந்த மஹிந்த
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:59.35 AM GMT ]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு மர்மங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியில், பதுங்குகுழி போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் நடந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பதுங்கு குழிகள் கட்டப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.
கொங்றீட்டினால் வலுவான முறையில் இந்த நிலத்தடி பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjv1.html

மகிந்த இல்லையேல் எங்களுக்கு வேலையில்லை: காலி உறுப்பினர்கள் கோயிலில் வேண்டுதல்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:59.45 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலில் பிரதம வேட்பாளராக மகிந்த ராஜபக்ச போட்டியிடவில்லை எனில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வெற்றி பெறுவது குறித்தும் பிரச்சினை இல்லையென காலி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த பிரதிநிதிகள் நேற்று சீனுகம் பிரதேச கோயில் ஒன்றில் இவ்வாறு வேண்டுதல் ஒன்றை முன்வைத்ததோடு வத்தளை பிரதேச சபை தலைவரை தாக்கியமைக்காக தேங்காய் உடைத்தும் வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க மெதமுல்லை செல்ல இவ் உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர்.

பாராளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் நேரடியாக ஒளிபரப்ப திட்டம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 04:43.17 AM GMT ]
பாராளுமன்ற ஒன்று கூடலை மீண்டும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நடவடிக்கை எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அரச தகவல் ஊடக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 20ம் திகதி டெலிகொம் பியோடிவி வலையமைப்பில் 92வது அலைவரிசையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடலாம்.
இதற்கு முன்னரும் இந்த தொழிநுட்பம் காணப்பட்டது. எனினும் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை சபாநாயகரினால் கைவிடப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட திரை மூலம் பாராளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக பார்வையிடலாம்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjv3.html

Geen opmerkingen:

Een reactie posten