தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும்: ஜே.வி.பி.
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 03:15.01 AM GMT ]
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை வெகு விரைவில் தீர்மானிக்க நேரிடும் என கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவுமே ஜே.வி.பி ஆதரவளிக்கும் என மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்ப காலம் தாழ்த்தப் போவதில்லை என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விஹாரைகளுக்கான சொந்தமான 1000 ஏக்கர் காணிகள் அபகரிப்பு: துறைசார் அமைச்சர் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 03:37.33 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தில் பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகளினால் இவ்வாறு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளை அச்சுறுத்தி காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகள் தங்களது நெருக்கமானவர்களுக்கு சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிக்க வழங்கப்பட்டுள்ளது பௌத்த பிக்குகளை ஆயுதம் காட்டி அச்சுறுத்தி விஹாரை காணிகளில் இருந்தவர்களின் வீடுகளை எரித்தே காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
பலவந்தமான அடிப்படையில் ராஜபக்ச அரசாங்கம் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான காணிகளை அபகரித்துக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்படாத காரணத்தினால் இந்த அனைத்து குற்றச் செயல்களும் மூடி மறைக்கப்பட்டன.
பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள பௌத்த விஹாரை காணிகளில் இதுவரையில் 22 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தி காணிகள் மீள பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக பிள்ளையான்?
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 04:43.41 AM GMT ]
கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்படலாமென நம்பத்தகுந்த அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிள்ளையானும், அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதியும் இவ்விடயம் தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjoz.html

இலங்கை அரசின் தீர்மானம் குறித்து இந்தியா கவலை!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:01.52 AM GMT ]
அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளித்திருப்பது தமக்கு அதிருப்தியளிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயற்படுத்த இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கினால் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எனினும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று புதிய அரசு பதவியேற்றதும் குறித்த திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே கொழும்பு நகர துறைமுக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, அமைச்சரவை பேச்சாளரும்,சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கடலில் மணல் நிரப்பி நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர பணிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.
எனவே துறைமுக நகர திட்டத்தை தொடர சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த கால ஆட்சியின் போது இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆதிக்கம் புதிய அரசாங்கத்தினால் மாற்றம் ஏற்படும் என இந்திய அரசாங்கம் நம்பியிருந்தது. ஆனால் புதிய அரசாங்கத்தின் திடீர் திருப்பத்தினால் இந்திய அரசிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjo0.html

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 05:11.38 AM GMT ]
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பில் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு த.தே.கூவின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சம்பூர், திருகோணமலை, வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள் குடியேற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுன்னாகம் நீர் மாசடைதல் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஆராய நீதி அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகளை மிக விரைவில் விடுதலை செய்ய நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjo1.html

Geen opmerkingen:

Een reactie posten